ரோலெக்ஸ் ரேடியோவை ஆட்டையை போட்ட ஷிவானி.. குட்டி டிரெஸ்ஸில் சும்மா கும்முன்னு இருக்காரே!
சென்னை: ஷிவானி நாராயணன் புதிய ஹேர்ஸ்டைல் உடன் குட்டி டிரெஸ் அணிந்து படு கூலாக போஸ் கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
அதில், அவர் கையருகே இருக்கும் அந்த ரோலெக்ஸின் மார்ஷல் ரேடியோ தான் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.
விக்ரம் படத்தின் மூலமாகத்தான் தமிழில் நடிகையாக அறிமுகமானார் ஷிவானி என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஹேர்ஸ்டைல்
ஏதாவது புதிய படத்தில் ஸ்கூல் பொண்ணு கேரக்டரில் நடிக்கிறாரா ஷிவானி நாராயணன் என்கிற கேள்வியைத் தான் அவரது லேட்டஸ்ட் ஹேர்ஸ்டைல் எழுப்புகிறது. கெளதம் மேனன் இயக்கத்தில் ஜீவா சமந்தா நடித்த நீதானே என் பொன்வசந்தம் படத்தில் ஸ்கூல் பொண்ணாக சமந்தா எப்படி இருந்தாரோ அதே போல மாறிவிட்டார் ஷிவானி நாராயணன்.

வெயிட்டு குறைஞ்சிடுச்சு
குண்டு பேபியாக இருந்த ஷிவானி நாராயணன் சத்தமே இல்லாமல் கடினமாக வொர்க்கவுட் செய்து டோட்டலாக தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளது அவரது லேட்டஸ்ட் வீடியோ மற்றும் புகைப்படங்கள் மூலமாக தெளிவாக தெரிகிறது. ஷிவானி வெயிட்டை குறைத்ததை ஏகப்பட்ட ரசிகர்கள் பாராட்டி வந்தாலும், சிலர் முன்பு தான் புசுபுசுன்னு அழகா இருந்தீங்க என தங்களது மன குறைகளை கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

ரோலெக்ஸ் ரேடியோ
இந்நிலையில், ஜிம்மில் கண்ணாடி அருகே அமர்ந்து கொண்டு எனர்ஜி ட்ரிங் குடிக்கும் ஷிவானி நாராயணன் கையில் ரோலெக்ஸ் சூர்யாவின் மார்ஷல் ரேடியோ இருப்பதை பார்த்த ரசிகர்கள் அதிதி ஷங்கர் போல ரோலெக்ஸ் ரோலெக்ஸ் என கமெண்ட் பாக்ஸ் முழுவதும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

விக்ரமில் அறிமுகம்
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்ற ஷிவானி நாராயணன் கமல் நடித்த விக்ரம் படத்தில் விஜய்சேதுபதியின் 3 மனைவிகளில் ஒருவராக நடித்து இருந்தார். விஜய்சேதுபதி இவருக்கு துப்பாக்கிச் சுட சொல்லிக் கொடுக்கும் காட்சிகள் எல்லாம் தியேட்டரில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. அடுத்து ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷம் படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடி சென்றார். பம்பர், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார் ஷிவானி.


Click it and Unblock the Notifications











