Shivani Narayanan: அந்த இடத்துக்கும் அம்மாவை கூட்டிட்டு போகும் ஷிவானி.. இவ்ளோ மோசமா கமெண்ட்ஸ் வருதே!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்த ஷிவானி நாராயணன் கோலிவுட்டில் 5 படங்களில் இதுவரை நடித்துள்ளார். அடுத்த பட அறிவிப்பை இன்னமும் வெளியிடாமல் உள்ள ஷிவானி நாராயணன் தனது அம்மாவுடன் ஜிம்முக்கு சென்ற வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது லேட்டஸ்ட் வீடியோவுக்கு கீழ் படு மோசமாகவும் ஆபாசமாகவும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. பிக் பாஸ் பிரபலங்களை தொடர்ந்து நெட்டிசன்கள் டார்கெட் செய்து சோஷியல் மீடியா புல்லிங் செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 4: சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த சின்ன பொண்ணு ஷிவானி நாராயணனுக்கு இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் டான்ஸ் வீடியோக்கள் மற்றும் கிளாமர் புகைப்படங்களால் மில்லியன் கணக்கில் ஆரம்பத்திலேயே ரசிகர்கள் குவிந்தனர். அதனை பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்றார். அங்கே அவருக்கும் பாலாஜி முருகதாஸுக்கும் நல்லாவே கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆனது. அந்த சீசனில் கமல்ஹாசனின் அன்பை அள்ளிய ஷிவானிக்கு விக்ரம் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
5 படங்களில் ஷிவானி: விக்ரம் படத்தை தொடர்ந்து ஆர் ஜி பாலாஜியின் வீட்ல விசேஷங்க படத்தில் ஒரு பாடலுக்கும், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும், விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படத்திலும் நடித்த ஷிவானி கடைசியாக கடந்த ஆண்டு வெளியான பம்பர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்துக்குப் பிறகு இன்னும் தனது அடுத்த பட அறிவிப்பை ஷிவானி வெளியிடவில்லை. மீண்டும் பழையபடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

அம்மாவுடன் ஜிம்முக்கு: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸ் உடன் பழகுவதை ஃப்ரீஸ் டாஸ்க்கின் போது வீட்டுக்குள் வந்து வெளுத்து இருந்தார் ஷிவானியின் அம்மா. அப்படியே லாஸ்லியாவின் அப்பா போட்ட டிராமா மாதிரியே இருக்கே என ரசிகர்கள் கலாய்த்தனர். அதன் பின்னர் பார்த்தால், தொடர்ந்து ஷிவானியின் பிறந்தநாள் விழாக்களில் நல்ல நண்பராகவே பாலாஜி முருகதாஸ் அவரது அம்மாவுடன் செல்ஃபியாக எடுத்து போட்டுத் தாக்கினார். இந்நிலையில், தனது அம்மாவுடன் ஜிம்முக்கும் ஷிவானி வந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. பொண்ணுக்கு பாதுகாப்பா ஜிம்முக்கு கூட அவருடைய அம்மா வந்து விட்டாரா என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
கவர்ச்சியான வொர்க்கவுட்: ஷிவானி நாராயணன் அணிந்திருந்த ஜிம் உடையை பார்த்து ரசிகர்கள் வொர்க்கவுட் செய்யாமலே வியர்த்துப் போய் விட்டனர். அந்தளவுக்கு படுகவர்ச்சியாக ஷில்பா ஷெட்டி, மலைகா அரோராவை எல்லாம் ஓரங்கட்டும் அளவுக்கு ஷிவானி வொர்க்கவுட் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் இவர் ஜிம்முக்கு வொர்க்கவுட் செய்ய வந்தது போல தெரியலையே என கமெண்ட் அடித்துள்ளனர்.
ஆபாச கமெண்ட்டுகள்: ஷிவானியின் உடலையும் உடையையும் வைத்து படுமோசமாகவும் ஆபாசமாகவும் கமெண்ட்டுகளை நெட்டிசன்கள் அதிகளவில் போட்டு வருகின்றனர். சோஷியல் மீடியாவில் ஷிவானி நாராயணனுக்கு இந்த அளவுக்கு ஹேட்டர்கள் இருக்கின்றனரா? என நினைத்து அவரது ரசிகர்களே அதிர்ச்சியடைந்துள்ளனர். அடுத்த படத்துக்காக ஸ்லிம் ஆக வொர்க்கவுட்டை தீவிரப்படுத்தி வருகிறார் ஷிவானி என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











