Shivani Narayanan: இது ஷிவானியா? இல்லை சினேகாவா?.. சேலையில் ஆளே மாறிய பிக் பாஸ் பிரபலம்!
சென்னை: பிக் பாஸ் பிரபலமான ஷிவானி நாராயணன் லேட்டஸ்ட்டாக வெளியிட்டுள்ள வீடியோவில் அவரை பார்த்த ரசிகர்கள் சினேகா மாறி இருக்கீங்க என வர்ணிக்கும் அளவுக்கு ஆளே மாறி இருக்கிறார்.
சின்னத்திரை நடிகையாக விஜய் டிவியில் அறிமுகமான ஷிவானி நாராயணன். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் நடித்த விக்ரம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகமான ஷிவானி அடுத்ததாக பம்பர் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

ஷிவானியின் அடுத்த படம்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பப்ளியாக வலம் வந்த ஷிவானி நாராயணன் விக்ரம் படத்திற்கு பிறகு ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷம், வடிவேலுவின் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் மற்றும் விஜய்சேதுபதியின் டிஎஸ்பி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
ஆனால், இதுவரை அவருக்கான பெரிய ஸ்கோப் எதுவுமே கிடைக்கவில்லை. இந்நிலையில், இயக்குநர் செல்வகுமார் இயக்கத்தில் 8 தோட்டாக்கள் பட நடிகர் வெற்றி நடித்துள்ள பம்பர் படத்தில் அவருக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன் நடித்துள்ள படம் வரும் ஜூலை 7ம் தேதி திரைக்கு வருகிறது.

சேலை கட்டிய ஷிவானி: கிளாமர் தூக்கலாக கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்து வரும் ஷிவானி நாராயணன் அடிக்கடி சேலை அணிந்தும் செம ஹாட்டாக போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
எப்போதுமே குண்டு பல்ப் போட்டு அதன் பக்கத்தில் பளிச்சென பளிங்கு சிலை போல காட்சியளிக்கும் ஷிவானி நாராயணன் தற்போது ஹோட்டல் ரூமில் லோ லைட்டில் எடுத்த வீடியோவை வெளியிட்டு தனது ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.
சினேகா மாறியே இருக்கியேம்மா: அந்த வீடியோவில் ஷிவானியை பார்த்த ரசிகர்கள் இது நம்ம பிக் பாஸ் ஷிவானியா இல்லை சினேகாவா என்கிற குழப்பத்திற்கே ஆளாகி உள்ளனர்.
அப்படியே புன்னகை அரசி சினேகா போலவே இருக்கியேம்மா ஷிவானி என்று ரசிகர்கள் அவரது வீடியோவுக்கு கீழ் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். சேலையில் செம அம்சமா இருக்கீங்க ஷிவானி என்றும் பம்பர் படம் உங்களுக்கு சூப்பர் ஹிட் படமாகவும் மாறட்டும் என வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











