மனசுல பெரிய அசின்னு நினைப்பு.. உடலை ஒட்டிய ஆடையில் ரீல்ஸ் போட்ட ஷிவானி நாராயணன்.. கலாய்த்த ஃபேன்ஸ்!
சென்னை: பிக் பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன் தொடர்ந்து ஒரே உடையில் ஏகப்பட்ட பாடல்களுக்கு ரீல்ஸ் போட்டு வருகிறார். உடலை ஒட்டிய ஜிம் டிரஸ் போன்ற உடை அணிந்து கொண்டு செம க்யூட்டாக ஷிவானி நாராயணன் வெளியிட்டு வரும் வீடியோக்களை அவரது மில்லியன் கணக்கான ரசிகர்கள் ரசித்து லைக் போட்டு வருகின்றனர்.
அதேசமயம் வழக்கம் போல ஷிவானி நாராயணன் எந்த ஒரு பதிவு போட்டாலும் ட்ரோல் செய்து வரும் ரசிகர்கள் ஷிவானி நாராயணனை படு மோசமாக கலாய்த்து வருகின்றனர்.

விஜய் டிவியில் சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த ஷிவானி நாராயணன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமா வாய்ப்புகள் குவிய தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். சமீப காலமாக புதிய படங்களின் கமிட் ஆகாத அவர் மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கு வீடியோக்கள் மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
செம ஸ்லிம்: பப்ளி கேர்ளாக இருந்து வந்த ஷிவானி நாராயணன் புதிய பட வாய்ப்புகளை அள்ளுவதற்காக கடினமாக ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து தனது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார். ஸ்லிம் ஃபிட் கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு ஷிவானி நாராயணன் வெளியிட்டுள்ள மற்றும் வீடியோக்கள் வேகமாக பரவி வருகின்றன.
விக்ரம் முதல் பம்பர் வரை: முதல் படமே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பகத் ஃபாசில் மற்றும் விஜய் சேதுபதி என பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் நடிக்கும் வாய்ப்பு ஷிவானி நாராயணனுக்கு கிடைத்தது. அந்த படத்திற்கு பிறகு போனி கபூர் தயாரிப்பில் ஆர் ஜே பாலாஜி நடித்த வீட்ல விசேஷம் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். வடிவேலு மீண்டும் கம்பேக் கொடுக்க நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்த ஷிவானி நாராயணன் விஜய் சேதுபதியின் டிஎஸ்பி மற்றும் வெற்றி நடித்த பம்பர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
அசின் பாடலுக்கு ரீல்ஸ்: எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் இடம்பெற்ற " அய்யோ அய்யோ" பாடலுக்கு அசின் போல படு க்யூட்டாக ரியாக்சன் கொடுத்து ஷிவானி நாராயணன் ரீல்ஸ் போட்டுள்ள வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வாவ் என்றும் க்யூட் என்றும் இப்படியே தொடர்ந்து இன்ஸ்டாகிராம் ரசிகர்களை எண்டர்டெயின் செய்யுங்கள் ஷிவானி என்றும் ரசிகர்கள் வர்ணித்து கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.
கலாய்த்த ரசிகர்கள்: ஆனால், ஷிவானியை தொடர்ந்து ட்ரோல் செய்யும் ரசிகர்கள் ஒய் ஷிவானி ஒய் என்றும் ஒரே டிரெஸ்ஸில் இன்னும் எத்தனை ரீல்ஸ்மா போடுவ என்றும் மனசுல பெரிய அசின்னு நினைப்பு என மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். சமீபத்தில் தனது அம்மாவுடன் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்றிருந்த ஷிவானி நாராயணன் சீக்கிரமே சினிமாவில் தனது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்களில் லாஸ்லியா மற்றும் ஷிவானி நாராயணன் ரெண்டு பேருமே ரொம்ப அழகானவர்கள் என்றும் அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











