Shivani Narayanan: ஆலுவா புழையுடெ தீரத்து.. சொட்டச் சொட்ட நனைந்து.. மழையில் ஆட்டம் போட்ட ஷிவானி!

சென்னை: பிக் பாஸ் பிரபலமான ஷிவானி நாராயணன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற நிலையில் அங்கே எடுத்துக் கொண்ட ஏராளமான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்துக் கொடுத்திருந்தார். ஓணம் பண்டிகை ஸ்பெஷலாக தற்போது மலையாள படமான பிரேமம் படத்தின் பாடலுடன் மழையில் சொட்டச் சொட்ட நனைந்து கவர்ச்சி நடனம் போட்ட வீடியோவையும் போட்டோக்களையும் வெளியிட்டுள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்க விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக களமிறங்கினார் சின்னத்திரை நடிகை ஷிவானி நாராயணன். இளம் போட்டியாளரான அவரது அழகை பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் அவருக்கு ஆர்மி அமைத்து ஓட்டுக்களை போட்டு இறுதி வாரத்துக்கு முந்தைய வாரம் வரை அழகு பதுமையை போல அவரை உள்ளே வைத்திருந்தனர்.

Shivani Narayanan Onam 2024 Bigg Boss Tamil 2024

பாலாஜி முருகதாஸ் உடன் லவ் டிராக் ஓடிக் கொண்டிருந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்கு வந்த ஷிவானியின் அம்மா அவரை திட்டித் தீர்த்த காட்சிகள் எல்லாம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கமலின் ஃபேவரைட்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்களுக்கும் இளம் நடிகைகளுக்கும் தொடர்ந்து கமல்ஹாசன் தனது படங்களில் அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் நடித்து வெளியான விக்ரம் படத்திலும் ஷிவானிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. விஜய் சேதுபதிக்கு 3வது மனைவியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார் ஷிவானி நாராயணன்.

லாஸ்லியாவை போல: ஒரே வருடத்தில் 5 படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்த ஷிவானி நாராயணனுக்கு அதன் பிறகு லாஸ்லியாவுக்கு நேர்ந்த கதியை போல பட வாய்ப்புகளே கிடைக்காத நிலை உருவாகி விட்டது. விக்ரம், வீட்ல விசேஷம், டிஎஸ்பி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மற்றும் பம்பர் உள்ளிட்ட படங்களில் இதுவரை ஷிவானி நடித்துள்ளார்.

Shivani Narayanan Onam 2024 Bigg Boss Tamil 2024

மழையில் ஆட்டம்: இனிமேல் புதிதாக பட வாய்ப்புகளை பிடிக்க வேண்டும் என்றால் மீண்டும் பழையபடி இன்ஸ்டாகிராமில் ஓவர் டைம் பார்க்க வேண்டும் என்கிற முடிவுக்கு வந்த ஷிவானி நாராயணன் தொடர்ந்து தாய்லாந்துக்கு சுற்றுலா சென்று நீச்சல் குளத்தில் குளிக்கும் கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார். இந்நிலையில், ஓணம் ஸ்பெஷலாக மழையில் ஆட்டம் போடும் லேட்டஸ்ட் கவர்ச்சி வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

ஓவர் கிளாமர்: ஷிவானி நாராயணன் தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நிலையில், யாஷிகா ஆனந்தை போல ஓவர் கிளாமரில் போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். அதை பார்த்த நெட்டிசன்கள் யாராவது அவருக்கு சான்ஸ் கொடுங்கப்பா தொல்லை தாங்கல என கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர். ஷிவானி நாராயணன் செம க்யூட் என்றும் தமன்னாவை போல மழையில் நனைந்து ஆடுகிறார் என்றும் வர்ணனைகளும் குவிந்து வருகின்றன.

Shivani Narayanan Onam 2024 Bigg Boss Tamil 2024

நிவின் பாலி பாட்டுக்கு: பிரேமம் படத்தில் இடம்பெற்ற ஆலுவா புழையுடெ தீரத்து பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ளார் பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான ஷிவானி நாராயணன். பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பமாகவுள்ள நிலையில், ஷிவானி மீண்டும் பிக் பாஸுக்கு வந்தால் சூப்பராக இருக்கும் என்றும் ரசிகர்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். லட்சக்கணக்கான லைக்குகளும் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X