Don't Miss!
- News உயிரைக் கொல்லும் ஸ்மோக் பிஸ்கட்! இவ்வளவு பாதிப்பு தருமா? தடை எப்போது?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பீச் கேர்ள் ஷிவானி...நயன்தாரா லெவலுக்கு வீடியோ வெளியிட்டு அசத்தல்
சென்னை : சின்னத்திரை நடிகையான ஷிவானி நாராயணன், பிக்பாஸ் சீ்சன் 4 ல் பங்கேற்று மிகவும் பிரபலமடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றுள்ளார் ஷிவானி.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ் ஆகி விட்டார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாராளமாக கவர்ச்சி காட்டி எடுத்த படங்களை அடிக்கடி வெளியிட்டு, ரசிகர்களை குஷிபடுத்தி வருகிறார்.
தற்போது ஓய்விற்காக மாலத்தீவு சென்றுள்ள ஷிவானி, அங்கும் தனது தொடையழகு, இடையழகை காட்டி போட்டோக்களை எடுத்தும், பகிர்ந்தும் வருகிறார். சமீப நாட்களாக உச்சகட்ட கவர்ச்சிக்கு சென்ற ஷிவானி, பிகினியில் நீச்சல் குளத்தில் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டார்.
இந்நிலையில் இன்று, பீச் கேர்ள் என்ற வாசகத்துடன், பச்சை நிற ஸ்லீவ்லெஸ் உடையில் கடற்கரையில் தான் நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதுவும் இருமுகன் படத்தில் நயன்தாரா நடனமாடும், ஹலனா பாடலுக்கு ஸ்டைலாக நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை ஷிவானி பதிவிட்ட அரை மணி நேரத்தில் 22,000 க்கும் அதிகமானவர்கள் பார்த்து, லைக் செய்துள்ளனர். ஏற்கனவே ஷிவானியை தலைவி என கொண்டாடி வரும் அவரது ரசிகர்கள் இந்த வீடியோவை புகழ்ந்து வருகின்றனர்.