போற போக்குல ஒரு போட்டோஷூட்.. சும்மா கும்முன்னு இருக்கும் ஷிவானி நாராயணன்.. வர்ணிக்கும் ரசிகர்கள்!

சென்னை: சின்னத்திரை நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான ஷிவானி நாராயணன் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட் வைரலாகி வருகிறது.

தினமும் 4 மணி அல்லது 5 மணி என புதிய புதிய புகைப்படங்களை பதிவிட்டு இன்ஸ்டாகிராமில் மிகப்பெரிய ரசிகர்களை ஃபாலோயர்களாக மாற்றினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் தற்போது பிசியாகி வருவதால் அவ்வப்போது அவர் பதிவிடும் போட்டோக்கள் வேற லெவலில் டிரெண்டாகி வருகின்றன.

இன்ஸ்டா பேபி

இன்ஸ்டா பேபி

இன்ஸ்டாகிராமில் நடிகர்களை காட்டிலும் நடிகைகள் மற்றும் மாடல் அழகிகள் தான் குவிந்து கிடக்கின்றனர். சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் என பலரும் புதிய போட்டோஷூட்களை நடத்தி க்யூட்டாகவும் ஹாட்டாகவும் போட்டோக்களை ஷேர் செய்து வருகின்றனர்.

3 மில்லியன் ரசிகர்கள்

3 மில்லியன் ரசிகர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது சின்னத்திரை நடிகை ஷிவானி நாராயணனுக்கு அப்பவே 2 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களாக இருந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு கிடைத்த புகழ் காரணமாக ஏகப்பட்ட ரசிகர்கள் நாள் தோறும் ஃபாலோயர்களாக வருகின்றனர். தற்போது 3.1 மில்லியன் ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

கவர்ச்சியில் கண்ணு கூசுது

கவர்ச்சியில் கண்ணு கூசுது

இன்ஸ்டாகிராமின் இளவரசியாக மாறியுள்ள ஷிவானி நாராயணன் க்யூட்டான கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். அவரது அழகை பார்த்து சும்மா கண்ணு கூசுதே என ஏகப்பட்ட இளம் ரசிகர்கள் கமெண்ட்டுகளில் வர்ணித்து தள்ளுகின்றனர்.

கமல் படத்தில் சான்ஸ்

கமல் படத்தில் சான்ஸ்

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட ஷிவானி நாராயணன் கமல்ஹாசனின் குட் புக்கில் இடம்பெற்ற நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் விக்ரம் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

போற போக்குல

போற போக்குல

அடிக்கடி ஹாட் போட்டோக்களை களம் இறக்கி ரசிகர்களை அதகளப்படுத்தி வரும் ஷிவானி நாராயணன் டிசர்ட் அணிந்து சும்மா கும்முனு தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதற்கு கேப்ஷனாக போற போக்குல ஒரு போட்டோஷூட் என பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

லைக் போட்ட பாலா

லைக் போட்ட பாலா

ஷிவானி நாராயணன் தற்போது வெளியிட்ட இந்த புகைப்படத்தை 1.5 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். பிக் பாஸ் வீட்டில் மாமா மாமா என ஷிவானி சுத்தி வந்த பாலாஜி முருகதாஸும் மறக்காமல் ஆஜராகி ஷிவானியின் இந்த போட்டோவுக்கு லைக் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X