Shivani Narayanan: சாமந்தி பூ வைத்த சிட்டு.. பத்திப் பழமான ஷிவானி நாராயணனின் போட்டோஸ்!

சென்னை: சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர்களில் மிகவும் முக்கியமானவர் ஷிவானி நாராயணன். இவர் படங்களில் நடித்து பிரபலமானதை விட, இன்ஸ்டாகிராமில் தினமும் சரியாக நான்கு மணிக்கு விதவிதமான ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு பிரபலமானார். ஆரம்பத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வந்த ஷிவானி நாராயணன், தற்போது கவர்ச்சியை குறைத்துக்கொண்டு பாந்தமான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், சாமந்திப் பூவை தலையில் வைத்துக்கொண்டு அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் இதயத்தை தொட்டுள்ளன.

ஷிவானி நாராயணன்: விஜய் தொலைக்காட்சியின் "பகல் நிலவு" தொடரின் மூலம் ஷிவானி நாராயணன் சின்னத்திரையில் அறிமுகமானார். அந்த சீரியல் வெற்றி பெற்றதை தொடர்ந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் யாரிடமும் அதிகமாக பேசாமல் அமைதியாக இருந்த ஷிவானி நாராயணன், நிகழ்ச்சி முடிவடையும் சமயத்தில் தான் ஆட்டத்தை புரிந்து கொண்டு விளையாடத் தொடங்கினார். ஆனால் அதற்குள் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியதால், வெற்றி பெறும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.

Shivani Narayanan Instagram photo
Photo Credit:

சினிமாவில் என்ட்ரி: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஷிவானி நாராயணனுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய "விக்ரம்" படத்தில் விஜய் சேதுபதியின் மூன்றாவது மனைவியாக ஷிவானி நடித்திருந்தார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து "வீட்டிலே விசேஷம்", "நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்" உள்ளிட்ட சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். மேலும் "பம்பர்" படத்தில் வெற்றிக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்ற கனவுடன் வந்த ஷிவானி நாராயணனுக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், இன்ஸ்டாகிராமில் அவர் இன்னும் ராணி போலவே இருக்கிறார்.

Shivani Narayanan Instagram photo
Photo Credit:

பத்திப் பழமான ஷிவானி: ஷிவானி ஒரு புகைப்படத்தை பதிவிட்டாலே, அதற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. தற்போது ஷிவானி கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு, குங்குமம் மற்றும் திருநீறு வைத்துக்கொண்டு, தலையில் சாமந்திப் பூவை சூடி, மஞ்சள் நிற உடையில் அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை மழை போல குவிப்பதுடன், தங்களது இதயங்களையும் பரிசாக கொடுத்து வருகின்றனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. சிலர் ஷிவானி நாராயணனை பார்த்து கவிதைகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X