அட போங்கப்பா.. நான் கனவுலயே வொர்க்கவுட் பண்ணிக்கிறேன்.. பிக் பாஸ் ஷிவானி இப்படி சீட் பண்றாரே!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4 போட்டியாளர் ஷிவானி நாராயண் பிக் பாஸ் அல்டிமேட்டுக்கு வரும் அளவுக்கு எல்லாம் வாய்ப்புகள் இல்லாமல் இல்லையாம்.

கோலிவுட்டில் 3 படத்துக்கு மேல் புக் ஆகி நடித்து வரும் நடிகை ஷிவானி நாராயணன் கனவில் வொர்க்கவுட் செய்வதாக போட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்கள் தூக்கத்தை கெடுத்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் இப்படி கவர்ச்சி தூக்கலாக போட்டோக்களை போட்டே 30 லட்சம் ரசிகர்களை ஃபாலோயர்களாக மாற்றியிருக்கிறார் நம்ம ஷிவானி நாராயணன்.

குண்டு பாப்பா

குண்டு பாப்பா

பிக் பாஸ் வீட்டில் பாலாஜி முருகதாஸ் ஷிவானியை குண்டு பாப்பா என கிண்டல் செய்திருந்தார். மேலும், ஷிவானியை எப்போ காட்டினாலும் பிரியங்காவை போலவே அவரும் ஒரு foodie என்பதால் எதையாவது வாயில் போட்டு அரைத்துக் கொண்டே இருப்பார். மிக்சர் தின்னி ஷிவானி என்றும் நெட்டிசன்கள் அவரை பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போது கிண்டல் செய்து வந்தனர்.

செம வொர்க்கவுட்

செம வொர்க்கவுட்

அப்படி பேசியவர்களின் வாயை அடைக்கும் விதமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில், ஜிம்முக்கெல்லாம் போய் உடலை செம ஃபிட்டாக மாற்றினார் ஷிவானி நாராயணன். மேலும், சினிமா வாய்ப்புகள் அவரது கதவைத் தட்ட ஒரேயடியாக ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ரொம்பவே பாலிஷாக மாறி விட்டார்.

குவியும் வாய்ப்புகள்

குவியும் வாய்ப்புகள்

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் படத்தில் ஷிவானி நாராயணன் கமீட் ஆகி நடித்து வருகிறார். மேலும், ஆர்.ஜே. பாலாஜியுடன் ஒரு படம் மற்றும் பம்பர் படத்தில் வெற்றிக்கு ஜோடியாகவும் நடிகை ஷிவானி ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். விரைவில் ஷிவானியின் நடிப்பில் 3 படங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்த காத்திருக்கின்றன.

கனவில் வொர்க்கவுட்

கனவில் வொர்க்கவுட்

இந்நிலையில், தற்போது நடிகை ஷிவானி நாராயணன் ஷேர் செய்துள்ள லேட்டஸ்ட் வொர்க்கவுட் புகைப்படம் மற்றும் அதற்கு அவர் கொடுத்திருக்கும் கேப்ஷன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. ஜிம் உடையை மாட்டிக் கொண்டு சோபாவில் சாய்ந்தபடி தூங்குவது போல் போஸ் கொடுத்துள்ள ஷிவானி கனவிலேயே வொர்க்கவுட் செய்வதாக கேப்ஷன் போட்டுள்ளார்.

Recommended Video

Shivani Rajasekhar Exclusive | Anbarivu முதல் நெஞ்சுக்கு நீதி வரை | Filmibeat Tamil
தம்புல்ஸ் விழுந்திடப் போகுது

தம்புல்ஸ் விழுந்திடப் போகுது

5 மணி பஸ்ஸாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னதாக தினமும் சரியாக 5 மணிக்கு புதிய கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வந்த ஷிவானி நாராயணன் தற்போது தனது கையில் 5 கிலோ எடை கொண்ட தம்புல்ஸை வைத்துக் கொண்டு தூங்குவது போல போஸ் கொடுத்ததை பார்த்த அவரது ரசிகர்கள் பார்த்து செல்லம் காலில் விழுந்து அடிபட்டுடப் போகுது என பதறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X