Shivani Narayanan: யம்மாடியோவ்.. பிக் பாஸ் ஷிவானியா இது?.. அடுத்த படத்தில் அவருக்கு இதுதான் ரோலா?

சென்னை: நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான ஷிவானி நாராயணன் தொடர்ந்து ஜிம்மில் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது பாக்ஸிங் கற்றுக் கொள்ளும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் நம்ம ஷிவானியா இது என ஆச்சர்யத்தில் வாய் பிளந்துள்ளனர்.

விஜய் டிவி தொடர்களில் நடித்து வந்த இளம் நடிகையான ஷிவானி நாராயணனுக்கு பிக் பாஸ் சீசன் 4ல் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அர்ச்சனா, ரியோ ராஜ், ஆரி அர்ஜுனன், நிஷா, பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்ற சீசனில் ஷிவானி நாராயணன் தனது கவர்ச்சியால் கலக்கினார்.

Shivani Narayanan shares her boxing training video now

இவருக்கு இருக்குற ஃபாலோயர்ஸ்க்கு இவர் தான் டைட்டிலை வின் பண்ணுவார் என ஆரி அர்ஜுனனே ஆரம்பத்தில் பயந்தார்.

பிக் பாஸ் ஷிவானி: சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த சின்ன பொண்ணு ஷிவானி நாராயணனுக்கு இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் டான்ஸ் வீடியோக்கள் மற்றும் கிளாமர் புகைப்படங்களால் மில்லியன் கணக்கில் ஆரம்பத்திலேயே ரசிகர்கள் குவிந்தனர். அதனை பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்றார். அங்கே அவருக்கும் பாலாஜி முருகதாஸுக்கும் நல்லாவே கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆனது. அந்த சீசனில் கமல்ஹாசனின் அன்பை அள்ளிய ஷிவானிக்கு விக்ரம் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கடைசி படம் பம்பர்: விக்ரம் படத்தை தொடர்ந்து ஆர் ஜி பாலாஜியின் வீட்ல விசேஷங்க படத்தில் ஒரு பாடலுக்கும், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும், விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படத்திலும் நடித்த ஷிவானி கடைசியாக கடந்த ஆண்டு வெளியான பம்பர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்துக்குப் பிறகு இன்னும் தனது அடுத்த பட அறிவிப்பை ஷிவானி வெளியிடவில்லை. மீண்டும் பழையபடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

கிளாமர் வொர்க்கவுட்: ஷிவானி நாராயணன் சமீபத்தில் ஜிம்முக்கு அணிந்து வந்த உடையை பார்த்து ரசிகர்கள் வொர்க்கவுட் செய்யாமலே வியர்த்துப் போய் விட்டனர். அந்தளவுக்கு படுகவர்ச்சியாக ஷில்பா ஷெட்டி, மலைகா அரோராவை எல்லாம் ஓரங்கட்டும் அளவுக்கு ஷிவானி வொர்க்கவுட் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் இவர் ஜிம்முக்கு வொர்க்கவுட் செய்ய வந்தது போல தெரியலையே என கமெண்ட் அடித்தனர்.

பாக்ஸிங் வீடியோ: இந்நிலையில், வொர்க்கவுட்டை தாண்டி தற்போது ஷிவானி நாராயணன் பாக்ஸிங் டிரெய்னிங் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். செம ஃபிட்டாக இருக்கும் ஷிவானியின் உடம்பை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர். டிரெய்னர் ஒருவருடன் கிக் பாக்ஸிங் கற்றுக் கொள்ளும் வீடியோவை ஷிவானி வெளியிட்டுள்ளார். அடுத்த படத்தில் கிக் பாக்ஸராக ஷிவானி நடிக்கப் போகிறாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X