சொர்க்கபுரி.. பீச் பேபியாக மாறிய ஷிவானி நாராயணன்.. இவரும் வெளிநாட்டுக்கு டூர் கிளம்பிட்டாரே!

சென்னை: வழக்கமாக நியூ இயரை கொண்டாட நடிகைகள் வெளிநாடுகளுக்கு செல்வார்கள். ஆனால், இப்போ அக்டோபர் மாதமே நடிகைகள் தொடர்ந்து தீவு நாடுகளுக்கு பயணிக்க ஆரம்பித்து விட்டனர். அமலா பால், அமலா ஷாஜி வரிசையில் நடிகை ஷிவானி நாராயணனும் தீவு ஒன்றில் பீச் பேபியாக மாறியுள்ள போட்டோக்களை அடுக்கியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட ஷிவானி நாராயணன் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

shivani narayanan bigg boss tamil heroine

பகல் நிலவு சீரியல் மூலம் பளிச்சென தனது அழகை காட்டி ஏகப்பட்ட சின்னத்திரை ரசிகர்களை பஞ்சராக்கிய ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராமில் தினமும் 5 மணி பஸ்ஸாக வந்து கலக்கல் போஸ் கொடுத்து ஃபாலோயர்களையும் மில்லியன் கணக்கில் அதிகரித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் இளம் நடிகையாக கலக்கி வரும் ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் பலரது கவனத்தை கவர்ந்துள்ளது.

சீரியல் டு சினிமா: 16 வயதிலேயே சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்து விட்டார் ஷிவானி. விஜய் டிவியில் வெளியான பகல் நிலவு சீரியலில் நடிக்கத் தொடங்கிய ஷிவானி தொடர்ந்து சரவணன் மீனாட்சி, ராஜா ராணி, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா என பல சீரியல்களில் நடித்து வந்தார். பிக் பாஸில் இணைவதற்கு முன்பாகவே இன்ஸ்டாகிராமில் இவருக்கு 2 மில்லியன் ரசிகர்கள் இருந்தனர்.

shivani narayanan bigg boss tamil heroine

பிக் பாஸ் 4வது சீசனில்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் 4வது சீசனில் ஷிவானி நாராயணன் போட்டியாளராக கலந்து கொண்டர். அவரது பப்ளினஸை பார்த்து மேலும், ரசிகர்கள் அதிகரித்தனர். பாலாஜி முருகதாஸ் உடன் நெருக்கமாக பழகி வந்தார் ஷிவானி. அதற்காக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த அவரது அம்மா ஷிவானியை கண்டித்த டிராமாக்கள் எல்லாமே சூப்பராக அரங்கேறின. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியேறிய பின்னர் ஒவ்வொரு பர்த்டே பார்ட்டியிலும் பாலாவும் ஷிவானியும் ஒன்றாக அவரது அம்மாவுடனே போஸ் கொடுத்து வந்ததையும் ரசிகர்கள் பார்த்து ஷாக் ஆகினர்.

விக்ரம் முதல் பம்பர் வரை: பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே கமலின் ஃபேவரைட் போட்டியாளரான ஷிவானி நாராயணனுக்கு அவரது தயாரிப்பில் வெளியான விக்ரம் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷம், வடிவேலு உடன் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், மீண்டும் விஜய்சேதுபதி உடன் டிஎஸ்பி என நடித்து வந்த ஷிவானி வெற்றி உடன் இணைந்து பம்பர் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். பம்பர் படத்திற்கு பிறகு பம்பர் அடிக்கும் என நினைத்த ஷிவானிக்கு அடுத்ததாக இன்னும் எந்தவொரு பெரிய படமும் கிடைக்கவில்லை.

shivani narayanan bigg boss tamil heroine

பீச் பேபி: நடிகைகள் அக்டோபர் மாதத்திலேயே ஃபாரீன் டூர் அடிக்க கிளம்பி விட்டனர். அந்த வரிசையில் ஷிவானி நாராயணன் தீவு ஒன்றில் பீச் பேபியாக ராணி போல வாழும் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளையும் அன்பையும் பெற்று வருகிறார். ஒல்லியாக ஷிவானி மாறிய நிலையில், உடம்பை ஒட்டிய கவர்ச்சி உடைகளை அணிந்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த முறையாவது க்ளியர் பிகினி போட்டோக்கள் வருமா? என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

shivani narayanan bigg boss tamil heroine

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X