ப்பா.. பீச்சில் அப்படியொரு வீடியோ.. பின்னி பெடலெடுக்கும் பிக் பாஸ் ஷிவானி.. லியோ பாட்டு வேற!
சென்னை: ஷிவானி நாராயணன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பம்பர் திரைப்படம் அவருக்கு பம்பர் ஹிட் அடித்தது. கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் விஜய்சேதுபதியின் மனைவியாக நடித்திருந்தார்.
கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட ஷிவானி நாராயணன் கோலிவுட்டில் இளம் நடிகையாக கலக்கி வருகிறார்.

ஒரே வருடத்தில் அதிரடியாக 5 படங்களுக்கும் மேல் கமிட்டாகி நடித்த ஷிவானி அடுத்து எந்த படத்தில் நடிக்கப் போகிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், செம கூலாக புயலில் வீடியோ போடுவது, பீச்சில் வீடியோ போடுவது என இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கு தீனி போட்டு வருகிறார்.
பிக் பாஸ் ஷிவானி: பப்ளி கேர்ளாக விஜய் டிவி சீரியல்களில் நடித்து வந்த ஷிவானி நாராயணன் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் போட்டோக்களையும், டான்ஸ் ஆடும் வீடியோக்களையும் வெளியிட்டு 2 மில்லியன் ஃபாலோயர்களை கவர்ந்திருந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. பாலாஜி முருகதாஸ், ஆரி அர்ஜுனன், ரம்யா பாண்டியன், அர்ச்சனா, ரியோ ராஜ் உள்ளிட்ட பலர் போட்டியாளராக பங்கேற்ற அந்த சீசனில் ஷிவானியை பார்த்து சொக்கிப் போகாதவர் யாருமே இல்லை என்று சொல்லலாம்.
பட வாய்ப்புகள்: விக்ரம் படத்தில் அறிமுகமான ஷிவானி நாராயணனுக்கு ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷம், விஜய்சேதுபதியின் டிஎஸ்பி, வடிவேலு ரீ என்ட்ரி கொடுத்த நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் மற்றும் 8 தோட்டாக்கள் வெற்றி நடிப்பில் வெளியான பம்பர் என தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தன. தனது அழகான நடிப்பால் சில்வர் ஸ்க்ரீனிலும் ரசிகர்களை கவர்ந்தார் ஷிவானி நாராயணன்.
பீச்சில் லியோ பாட்டுக்கு: இந்நிலையில், ஷிவானி நாராயணன் பீச்சில் செம கூலாக நடந்து வரும் வீடியோவை போட்டு அதன் கூடவே லியோ படத்தில் இடம்பெற்ற ஆர்டினரி பெர்சன் பாடலை பேக்கிரவுண்டில் போட்டு சும்மா மாஸ் காட்டி உள்ளார். ஏற்கனவே மிக்ஜாம் புயலின் போது மழையில் ஆட்டம் போட்ட வீடியோவை போட்டு ட்ரோலுக்கு உள்ளான ஷிவானி தற்போது மீண்டும் இன்ஸ்டா ரசிகர்களை சில் பண்ண இப்படியொரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











