எனை படைத்தவன் நீ தான் ஐயா.. திருவண்ணாமலை கிரிவலத்தில் சிவனை உருகி வேண்டிய ஷிவானி நாராயணன்!

சென்னை: பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகை ஷிவானி நாராயணன் தனது அம்மாவுடன் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற வீடியோ காட்சிகளை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சோஷியல் மீடியாவில் சிலுக்கு போல கவர்ச்சியாக போட்டோக்களை வெளியிட்டு வரும் ஷிவானி நாராயணன் கடவுள் பக்தி என வந்துவிட்டால் கையில் பிடிக்க முடியாத அளவுக்கு ஆன்மீகவாதியாக மாறிவிடுகிறார் என அவரது ரசிகர்களே கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Shivani Narayanan visits Tiruvannamalai Girivalam


கடந்த ஆண்டு திருப்பதிக்கு சென்ற வீடியோ காட்சிகளை வெளியிட்ட ஷிவானி நாராயணன் தற்போது திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றுள்ளார். அதன் காட்சிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

சீரியல் டு பிக் பாஸ்: விருதுநகரில் பிறந்து வந்த ஷிவானி நாராயணன் மாடலிங் துறையில் ஆர்வம் செலுத்திய நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் அறிமுகமானார். அதன் பின்னர் சரவணன் மீனாட்சி, ராஜா ராணி சீசன் 1, கடைக்குட்டி சிங்கம், ஜீ தமிழில் ஒளிபரப்பான ரெட்டை ரோஜா உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த ஷிவானி நாராயணன் பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானார்.

ஐந்து படங்கள்: கடந்த 2022 ஆம் ஆண்டு கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பகத் ஃபாசில் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்றாவது மனைவியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார் ஷிவானி நாராயணன். அதே ஆண்டு தொடர்ந்து வீட்ல விசேஷம், டிஎஸ்பி மற்றும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என நான்கு படங்களில் நடித்தார். கடந்தாண்டு வெற்றி நடிப்பில் வெளியான பம்பர் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன் பின்னர் எந்த ஒரு படத்திலும் இன்னும் அவர் கமிட் ஆகவில்லை. சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் கூட ஷிவானி பங்கேற்கவில்லை.

ஜிம்மில் தீவிர ஒர்க்அவுட்: பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் நடிகையாக மாறிய லாஸ்லியா சில படங்களில் நடித்த பின்னர் பட வாய்ப்புகள் இல்லாமல் போன நிலையில் தனது உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைத்து ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்து ஒல்லியானார். ஆனால் அதன் பின்னரும் இன்னமும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதே போல ஷிவானி நாராயணனும் எடையை குறைக்க தீவிரமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ஃபாலோயர்களை அதிகரித்து வருகிறார்.

திருவண்ணாமலையில் கிரிவலம்: தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என்கிற ஆர்வத்துடன் கடினமாக உழைத்து வருகிறார். கிட்டத்தட்ட ஒரு வருடமாக எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்காத நிலையில், தனது அம்மாவுடன் திருவண்ணாமலைக்கு சென்று கிரிவலம் செய்துள்ளார் ஷிவானி நாராயணன்.

நெய்விளக்கு ஏற்றி: அக்னி லிங்கம், வாயு லிங்கம் என கிரிவல பாதையில் இருக்கும் அனைத்து சிவ ஆலயங்களுக்கும் சென்று நெய்விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தியுள்ளார். மேலும், மான்களை கண்டு ரசிக்கும் வீடியோ காட்சியையும் அவர் ஷேர் செய்துள்ளார். திருவண்ணாமலையில் அவர் எடுத்த வீடியோவுடன் ”என்னை படைத்தவன் நீ தான் ஐயா” என்கிற பாடலையும் சேர்த்து எடிட் செய்த வீடியோவை ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார். சீக்கிரமே ஷிவானி நாராயணனுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என ரசிகர்கள் வாழ்த்தி கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X