»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

கன்னடப்பட உலகின் நம்பர் ஒன் இடத்தில் உள்ளவர் நடிகை ஷிவானி. பிரபல நடிகை ஜெயப்பிரதாவின் தம்பி மனைவியின் தங்கை இவர்.

இவரை தமிழுக்கு அழைத்து வந்தார் 24 ம நேரத்தில் ஒரு படத்தை எடுத்து கின்னஸ் சாதனை படைத்த தயாரிப்பாளர் சிவாலயா, ராமு சகேதரர்கள்.

யாரடா நீ மன்மதா என்று பெயரிட்டு பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடிக்க வைத்து பத்து நாட்கள் படப்பிடிப்புக் கூட நடந்தது.

அதைப் பார்த்த விரும்புகிறேன் பட டைரக்டர் பிரசாந்துக்குச் ஜோடியாக புக் பண்ணினார். பூஜைக்கும் கூட ஷிவானி வந்திருந்தார். என்ன மாயமோ?மந்திரமோ? யாரடா நீ மன்மதா படம் நின்றுபோனது.

இப்போது விரும்புகிறேன் படத்திலிருந்தும் ஷிவானி தூக்கப்பட்டு. ஸ்நேகா என்ற புதிய நடிகையை புக் செய்துள்ளார்கள்.

Read more about: cinema, replaced, shivani, sneha
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil