ஹீரோயின்
கன்னடத்தில் வெற்றி பெற்ற "6 டீன்ஸ்" என்ற இளசுகளின் காதல் கதை தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.
துள்ளுவதோ இளமைக்குப் பிறகு தமிழில் இப்போது மாணவர்களின் காதல் கதைக்குத்தான் கடும் மவுசு ஏற்பட்டுள்ளது.
இதை வைத்துப் பணம் பண்ண நினைத்த தயாரிப்பாளர் கே.கல்பனா, கே.ஆர்.பிரபு ஆகியோர், கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற டீன் ஏன் கதையான 6டீன்ஸ் படத்தை தமிழுக்குக் கொண்டு வருகிறார்கள்.
ஜெய, சீனு, வினாயக் ஜோஷி, சந்தோஷ், முகன் என ஐந்து புதுமுகங்கள் மாணவர்களாகவும், அவர்கள் கடலை போட்டு கலாய்க்கும் மாணவியாகஷோனாவும் இதில் நடித்திருக்கிறார்கள். இந்த ஷோனா வேறு யாரும் இல்லை, கருத்தம்மாவில் நடித்த ராஜஸ்ஸ்ரீயின் தங்கை தான்.
ஏற்கனவே டி.ராஜேந்திரின மோனிஷா என் மோனலிஷாவில் சைட் ரோல் செய்துள்ளார் ஷேபனா. அந்தப் படத்தில் பாபி என்ற பெயரில் அறிமுகமானார்.இப்போது ஷோபனா என்ற நாமகரணத்துடன் மீண்டும் வருகிறார்.
இளசுகளுக்கேற்ற பாடல்களை வாலி எழுதியுள்ளார். கானா புகழ் தேவா இசையமைத்துள்ளார். படத்தை ஏ.சுப்ரமணியம் இயக்கியுள்ளார். இவர்கன்னடத்தில் பல படங்களை இயக்கியுள்ளாராம்.


Click it and Unblock the Notifications











