விஜய் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா! அப்படியே நான் ஷாக் ஆயிட்டேன்!!

By Mayura Akilan

என்னாது... விஜய் படத்தில் நயன்தாரா நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாரா? என்று தளபதி ரசிகர்கள் கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார்களாம்.

சிவகாசி படத்தில் எங்க தளபதி கூட ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டாக. அப்புறம் வில்லு படத்துல ஜோடி சேர்ந்தாக. ஆனா 59 வது படத்தில நடிக்க மாட்டேனு சொல்லிட்டாகலாம்ல. இதுதான் இன்றைக்கு விஜய் ரசிகர்களின் பேச்சாக இருக்கிறது.

விஜய் நடிக்கும் 59வது படத்தினை அட்லி இயக்கப்போகிறார் என்று தகவல் வெளியான உடனேயே ஹீரோயின் நயன்தாராதான் என்ற பேச்சு அடிபட்டது.

ஆனாலும் அதிகாரப்பூர்வமாக எதுவும் வெளியாகவில்லை. அதற்குமுன் சிம்புத்தேவன் இயக்கி வரும் புலி படத்தில் பிஸியாகிவிட்டார் விஜய்.

சின்ன பிரேக் கூட இல்லாமல் இரண்டு வேடங்களில் பிஸியாக நடித்து வருகிறார் விஜய். இப்படத்தில் ஹன்சிகா மற்றும் ஸ்ருதிஹாசன் இருவரும் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகின்றனர்.

59 வது படத்தில்

59 வது படத்தில்

புலி படத்தையடுத்து அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இந்த படத்திலும் விஜய்க்கு இரண்டு ஜோடிதான். இதில் சமந்தா, எமிஜாக்சன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீபிகா படுகோனோ, சோனாக்ஷி

தீபிகா படுகோனோ, சோனாக்ஷி

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் படம் என்பதால் வட இந்திய ஹீரோயின் ஜோடி சேருவார் என்று கூறப்பட்டது. தீபிகா படுகோனே, சோனாக்ஷி சின்கா ஆகியோர் விஜய்க்கு ஜோடி சேருவார்கள் என்றும் முதலில் பேசப்பட்டது.

மறுத்த நயன்தாரா

மறுத்த நயன்தாரா

அதே சமயம் கதாநாயகியாக முதலில் நயன்தாரா தான் நடிக்க இருப்பதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் நயன்தாரா நடிக்க மறுத்துவிட்டாராம்.

ஸ்கோப் இல்லையே

ஸ்கோப் இல்லையே

இனி தனக்கு ஸ்கோப் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளாராம் நயன்தாரா. எல்லா ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்தாகிவிட்டது. ஹீரேயின் சப்ஜெக்ட் உள்ள படமாக இருந்தால் வாருங்கள் என்று இயக்குநர்களிடம் கூறியுள்ளாராம்.

எமி – நயன்தாரா

எமி – நயன்தாரா

ஆனால் விசயம் அது இல்லையாம் மற்றொரு ஹீரோயின் எமி என்பதால் நயன்தாரா மறுத்துவிட்டாராம். ஏற்கனவே சூர்யா உடன் மாஸ் படத்தில் நயன்தாராவும், எமி ஜாக்சனும் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் எமி ஜாக்சன் விலகினார். அவருக்கு பதிலாக பிரணீதா நடிக்கிறார். சூர்யாவிடம் விட்ட இடத்தை விஜயிடம் பிடித்துக்கொண்டார் எமிஜாக்சன்.

கத்தி நாயகி

கத்தி நாயகி

இப்போது விஜய் உடன் கத்தி நாயகி சமந்தா ஜோடி சேர்ந்துள்ளார். இந்தப்பக்கம் சமந்தா அந்தப்பக்கம் எமி ஜாக்சன் என இரண்டு நாயகிகளுடன் டூயட் பாடுவார் எங்க தளபதி என்று உற்சாகமடைந்துள்ளனர் விஜய் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X