ஷாக்கிங்.. கழிவறைக்கு கூட போக முடியாமல் கஷ்டப்பட்ட ரஜினிகாந்த் ரீல் ஜோடி நடிகை.. என்ன ஆச்சு?

சென்னை: ரஜினிகாந்தின் கபாலி படத்தில் நடித்த நடிகை ராதிகா ஆப்தே கழிவறைக்கு கூட போக முடியாமல் 4 மணி நேரம் ஒரே இடத்தில் அடைக்கப்பட்டதாக அறிவித்து அதிர்ச்சியை கிளப்பி உள்ளார். பாலிவுட் மற்றும் கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வரும் ராதிகா ஆப்தேவுக்கு அப்படி என்ன தான் ஆச்சு என ரசிகர்கள் பதறிப் போயுள்ளனர். இந்த பொங்கலுக்கு வெளியான விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ் படத்திலும் அவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமா பிரபலங்கள் அடிக்கடி விமானத்தில் டிராவல் செய்வது வழக்கம். சென்னை, பெங்களூர், மும்பை, ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகள் என ஒவ்வொரு நகரங்களுக்கும் படப்பிடிப்புக்காகவும் விளம்பர படங்களில் நடிக்கவும் ஓயாமல் பறந்து வருகின்றனர். அப்படி சமீபத்தில் விமானத்தில் செல்ல சென்ற போது தான் நடிகை ராதிகா ஆப்தேவுக்கு அப்படியொரு அவஸ்த்தை ஏற்பட்டு இருக்கிறது.

Shocking! Radhika Apte locked in airport and also struggle for bathroom too

ஏர்போர்ட்டில் லாக்கான கபாலி நடிகை: பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தின் போஸ்டர்களே விமானத்தில் ஒட்டப்பட்டு பெரியளவில் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. அந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ராதிகா ஆப்தேவை விமான நிலையத்தில் சுமார் 4 மணி நேரங்கள் அடைத்து வைத்து டார்ச்சர் கொடுத்திருக்கின்றனர்.

அப்செட்டான ஆப்தே: சேக்ரட் கேம்ஸ் வெப்சீரிஸில் நடித்து பாலிவுட்டில் பிரபலமான ராதிகா ஆப்தே லஸ்ட் ஸ்டோரிஸ் உள்ளிட்ட ஏகப்பட்ட ஓடிடி படைப்புகளிலும் பாலிவுட்டில் நடித்து வருகிறார். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடித்து இந்த பொங்கலுக்கு வெளியாகி இருக்கும் மெரி கிறிஸ்துமஸ் படத்தில் கேமியோ ரோலில் நடித்து கலக்கிய ராதிகா ஆப்தே காலை 8 மணிக்கு விமானத்தில் பறக்க விமான நிலையம் வந்த நிலையில், விமானம் தாமதம் ஆன காரணத்தினால் சக பயணிகளுடன் கண்ணாடி அறையில் எந்தவொரு வசதியும் இன்றி அடைக்கப்பட்டு விட்டதாக புகார் அளித்துள்ளார்.

கழிவறைக்கு கூட போக முடியவில்லை: இன்று காலை 8.30 மணிக்கு வந்து சிக்கிக் கொண்டேன். என்னை போல பல பயணிகள் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை சிக்கித் தவித்து வருகின்றனர். விமான ஊழியர்கள் உரிய அறிவிப்பையோ எங்களை வெளியேவோ விடாமல் அடைத்து வைத்திருக்கின்றனர். தண்ணீர் குடிக்க முடியவில்லை, கழிவறைக்கும் செல்ல வழி இல்லை சுமார் 3 மணி நேரம் அடைந்து கிடக்கிறேன். மதியம் 12 மணிக்குத்தான் விமானம் வரும் என்கின்றனர் என பதிவிட்டுள்ளார். எந்த நகரத்தில், எந்த விமான நிலையத்தில் இந்த தர்ம சங்கடமான சூழல் நிலவியது என்பதை அவர் தெரிவிக்கவில்லை. ராதிகா ஆப்தேவின் பதிவை பார்த்த அவரது ரசிகர்கள் பொறுப்பற்ற விமான ஊழியர்களையும் நிர்வாகத்தையும் திட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X