»   »  குழந்தைப் பருவத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்: இளம் ஹீரோயின் பகீர் தகவல்

குழந்தைப் பருவத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்: இளம் ஹீரோயின் பகீர் தகவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: குழந்தை பருவத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக பாலிவுட் நடிகை சோனம் கபூர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை சோனம் கபூர் மனதில் பட்டத்தை வெளிப்படையாக பேசுவார். இதனாலேயே பாலிவுட்டில் பலருக்கு அவர் மீது கோபம். நான் சக நடிகர்களுடன் படுக்கையை பகிர்வது இல்லை அதனால் தான் எனக்கும், அவர்களுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது என்று கூறி பாலிவுட் நடிகைகளை அதிர வைத்தவர்.

இந்நிலையில் அவர் புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

தான் குழந்தை பருவத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சோனம் கபூர் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள் இப்படி ஒரு விஷயத்தை தெரிவித்துள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கல்கி கொச்லின்

கல்கி கொச்லின்

பாலிவுட் நடிகை கல்கி கொச்லினும் 9 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளார். இது குறித்து அவர் முன்பு கூறியபோது, செக்ஸ் என்றால் என்னவென்று தெரியாமல் என் 9 வயதில் ஒருவர் என்னுடன் உடலுறவு கொள்ள அனுமதித்தேன். இதை என் அம்மா கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற பயம் தான் எனக்கு அதிகம் இருந்தது என்றார்.

தம்பி

தம்பி

முன்னதாக தனது தம்பியின் செக்ஸ் வாழ்க்கை பற்றி பேசி அனைவரையும் அதிர வைத்தவர் சோனம். தனது தம்பி பாதுகாப்புடன் அவரின் காதலியுடன் உறவு வைத்துக் கொள்கிறார் என நம்புவதாக சோனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சோனம்

சோனம்

ஆர். பால்கியின் அடுத்த படத்தில் சோனம் கபூர் அக்ஷய் குமார் ஜோடியாக நடிக்க உள்ளார். தமிழில் தனுஷ் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார் சோனம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In a startling revelation, Bollywood actor Sonam Kapoor has said that she was molested as a child and the experience was traumatising.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil