லிங்கா ஷூட்டிங் முடிந்த கையோடு முடியில் கத்தரி வைத்த சோனாக்ஷி
மும்பை: லிங்கா படப்பிடிப்பு முடிந்த கையோடு சோனாக்ஷி சின்ஹா தனது தலைமுடியை நறுக்கியுள்ளார்.
பாலிவுட்டில் சத்தமில்லாமல் வெற்றிப் படங்கள் கொடுப்பவர் சோனாக்ஷி சின்ஹா. அவர் பாலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு வந்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள லிங்கா படத்தில் நடித்துள்ளார்.
படப்பிடிப்பின்போது தனது தந்தையின் நண்பரான ரஜினியிடம் நிறைய கற்றுக் கொண்டதாக சோனா தெரிவித்துள்ளார்.

லிங்கா
சோனா கடந்த வாரம் தான் லிங்கா படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்து முடித்தார்.

முடி
சோனாக்ஷி சின்ஹாவுக்கு நீளமான முடி உண்டு. லிங்கா படத்திலும் நீளமான முடியுடன் தான் நடித்துள்ளார்.

கட்
படப்பிடிப்பு முடிந்த கையோடு அவர் தனது முடியை நறுக்கிவிட்டார். புதிய ஹேர்ஸ்டைலை அவர் போட்டோ எடுத்து ட்விட்டரில் போட்டுள்ளார்.
ட்வீட்
முடி இன்று இருக்கும், நாளை போகும், குட்டை முடி!!! பல ஆண்டுகள் கழித்து! என்று சோனா ட்வீட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











