கொரோனா குர்ருன்னு பரவிட்டு இருக்கு.. கருப்பு நிற வானவில்லாம்ல.. நடிகையை இப்படி வர்ணிக்கிறாய்ங்க?

By

மும்பை: நடிகை ஸ்ரத்தா தாஸின் யோகா புகைப்படம் வைரலாகி வருகின்றன.

Recommended Video

Celebrities Quarantine | Shanthanu | KiKi | Dhruv Vikram

இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரத்தா தாஸ்.

தெலுங்கில் ஆர்யா 2, டார்லிங், நாகவல்லி, மொகுடு, அட்டா, ஹிப்பி உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

இந்தி மற்றும் தெலுங்கில் நடித்து வரும் ஸ்ரத்தா மற்ற ஹீரோயின்களை போல, அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகும். கடந்த சில வாரங்களுக்கு முன் அவர் வெளியிட்ட போட்டோக்கள் கூட அதிகமாக பரவின. பெண்கள் தினத்தை முன்னிட்டு அவர் பதிவு செய்துள்ள போட்டோவில், பெரிய கேப்ஷன் கொடுத்திருந்தார்.

கெடுதல் இல்லாமல்

கெடுதல் இல்லாமல்

அதில், வாழ்க்கையில் இப்போது நான் இருக்கும் இடத்தை அடைய, கடினமாக உழைத்திருக்கிறேன். நான் விரும்பும் வழியில் வாழ்கிறேன், மற்றவர்களுக்கு கெடுதல் இல்லாமல், என் விருப்பத்தைச் செயல்படுத்துகிறேன். என் ஒவ்வொரு நிமிடத்தையும், ஒவ்வொரு நாளையும் கருணையுடன் எப்படி செலவிட வேண்டும் என்பதை நானே தேர்வு செய்கிறேன்' என்று தெரிவித்திருந்தார்.

கொரோனா

அதை, ரசிகர்கள் வரவேற்று இருந்தனர். இந்நிலையில் கொரோனா காரணமாக, அனைவரும் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சில நட்சத்திரங்கள் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். சிலர் எக்சர்சைஸ் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். நடிகை ஸ்ரத்தா தாஸ், தனது வீட்டில் யோகா செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி

இந்த போட்டோ வேகமாக பரவி வருகிறது. அதில், இந்த ஓய்வு நேரத்தை ஆக்கப்பூர்வமாகவும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுத்திக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் கமென்ட் அடித்துள்ளனர். பாதுகாப்பாக இருக்கும்படி ரசிகர்கள் அவருக்கு அட்வைஸ் செய்துள்ளனர். 'உங்க அழகுக்கு முன்னால, கொரோனாவோட அப்பா கூட வராது' என்று ஒரு ரசிகர் வழிந்துள்ளார்.

கருப்பு வானவில்

இன்னும் சில ரசிகர்கள், கொரோனா வேகமாக பரவி வரும் நேரத்தில், அவரை வர்ணித்துள்ளனர். கருப்பு நிறத்தில் ஒரு வானவில் என்று ஒருவர் கவிதையாகக் கூறியுள்ளார். இன்னொருவர் நோய் எதிர்ப்பு சக்தி வேணும்னா, இதெல்லாம் பண்ணுங்க என்று பெரிய லிஸ்டே போட்டிருக்கிறார். யோகாவோட இதையும் பண்ணினா, சூப்பரா இருக்கும் என்று கூறியுள்ளார். இன்னொருவர் நீங்க எப்ப யோகா டீச்சரா மாறுனீங்க? என்று கேட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X