மொத்த தொடையழகையும் காட்டி கதறவிடுறாரே.. பிரபாஸ் பட நாயகியின் செம ஹாட் கிளிக்ஸ்.. குவியுது லைக்ஸ்!
மும்பை: கருப்பு நிற கவர்ச்சி உடை அணிந்து ஒட்டு மொத்த தொடையழகையும் காட்டியபடி போஸ் கொடுத்து இணைய ரசிகர்களை கதறவிட்டுள்ளார் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர்.
ஆஷிக் 2 படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார் ஷ்ரத்தா கபூர்.
நடிகர் பிரபாஸின் சாஹோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் நடிகை

பிரபலத்தின் வாரிசு
பழம்பெரும் பாலிவுட் வில்லன் நடிகரான சக்தி கபூரின் மகளான ஷ்ரத்தா கபூர். கடந்த 2010ம் ஆண்டு டீன் பேட்டி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஆஷிக் 2 படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டை தாண்டி இந்தியளவில் ஏகப்பட்ட ரசிகர்களை சம்பாதித்தார்.

பிரபுதேவா படம்
ஏபிசிடி, ஸ்ட்ரீட் டான்ஸர் உள்ளிட்ட பிரபுதேவா படங்களில் நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்து, வேற லெவல் டான்ஸ் ஆடி ஒட்டுமொத்த பாலிவுட் ரசிகர்களின் கனவுக் கன்னியாக மாறியுள்ளார் ஷ்ரத்தா கபூர். மேலும், பாகி உள்ளிட்ட திரைப்படங்களில் இவரது நடிப்பும் நடனமும் அபாரம்.

பிரபாஸ் ஜோடி
பாகுபலி படத்திற்கு பிறகு கடந்த 2018ம் ஆண்டு வெளியான பிரபாஸின் பிரம்மாண்ட பட்ஜெட் படமான சாஹோ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்தார் ஷ்ரத்தா கபூர். பாகுபலி அளவுக்கு அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காதலருடன் பைக் ரைடு
கடந்த ஆண்டு லாக்டவுன் நேரத்தில் மும்பையில் தனது ரூமர் காதலர் ரோகன் ஸ்ரேஷ்தாவுடன் நடிகை ஷ்ரத்தா கபூர், கருப்பு நிற டிசர்ட், டிராக் பேன்ட் மற்றும் மாஸ்க் அணிந்த படி மிகவும் நெருக்கமாக ஒட்டிக் கொண்டு பைக்கில் செல்லும் வீடியோ காட்சி வெளியாகி வைரலானது.

போதைப் பொருள் விவகாரம்
கடந்த ஆண்டு இறுதியில் பாலிவுட் பிரபலங்களை துரத்திய போதைப் பொருள் விவகாரத்தில் நடிகை ஷ்ரத்தா கபூரின் பெயரும் அடிபட்டது. தீபிகா படுகோனே, சாரா அலி கான், ரகுல் ப்ரீத் சிங்கை தொடர்ந்து இவரும் விசாரணைக்கு ஆஜரானது குறிப்பிடத்தக்கது.

மொத்த தொடையும் காட்டி
இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற ஷைனிங்கான கவுனை அணிந்து கொண்டு ஒய்யாரமாக போஸ் கொடுத்த போட்டோவை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் ஷ்ரத்தா கபூர். ஒரு பக்க தொடை மொத்தமாக தெரியும் படி ஷ்ரத்தா கொடுத்துள்ள போஸ் இணையத்தை சூடாக்கி வருகிறது.

கொட்டுது லைக்ஸ்
அதே உடையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். ஏகப்பட்ட பாலிவுட் பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் என பலரும் இந்த போட்டோக்களுக்கு மில்லியன் கணக்கில் லைக்குகளை கொட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











