தல 59 படத்தில் விக்ரம் வேதா நடிகை, நஸ்ரியா, வாரிசு நடிகை?

By Siva

சென்னை: அஜித்தின் தல 59 படத்தில் நடிக்கும் மூன்று பெண்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஸ்வாசம் படத்தை அடுத்து அஜித் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு தற்போதைக்கு தல 59 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இது இந்தி படமான பிங்க்கின் ரீமேக் என்பது அனைவருக்கும் தெரியும்.

அஜித்

அஜித்

படத்தில் 3 இளம்பெண்களுக்காக நீதிமன்றத்தில் நியாயம் கேட்கும் வழக்கறிஞராக அஜித் நடிக்கிறார். அந்த 3 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் மூன்று இளைஞர்களில் ஒருவராக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிக்கிறார். இந்தியில் டாப்ஸி நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க உள்ளாராம்.

ஷ்ரத்தா

ஷ்ரத்தா

பாலிவுட்டில் டாப்ஸிக்கு பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த படம் பிங்க். இந்நிலையில் அவரின் கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். இந்த படம் மூலம் ஷ்ரத்தாவுக்கு கோலிவுட்டில் பெரிய பெயர் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

கல்யாணி

கல்யாணி

ஷ்ரத்தா தவிர்த்து நஸ்ரியா நஸீமும், இயக்குனர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணியும் தல 59 படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திருமணத்திற்கு பிறகு நஸ்ரியா தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் அஜித் படம் மூலம் மீண்டும் கோலிவுட் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

யுவன்

யுவன்

தல 59 படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஸ்வாசம் படத்தை போன்று இல்லாமல் தல 59 பட அப்டேட் ஏற்கனவே வரத் துவங்கிவிட்டது. தொடர்ந்து அப்டேட் கிடைக்கும் என்று தல ரசிகர்கள் நம்புகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X