நான் தனிமைப்பட்டு இருக்கிறேன்.. வெறுப்பா இருக்கு.. ஸ்ரத்தா ஶ்ரீநாத் வருத்தம் !

பெங்களூர் : நடிகை ஸ்ரத்தா ஶ்ரீநாத் விமான பயணம் மேற்கொண்டதால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

நடிகை ஸ்ரத்தா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் முன் ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு விமானத்தின் மூலம் சென்னை வந்துள்ளார். மீண்டும் சென்னையிலிருந்து பெங்களுருக்கு விமான பயணம் மேற்கொண்டுள்ளார். இதனால், சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல் படி மார்ச் 16ந் தேதியில் இருந்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

shraddha srinath corona quarantine

நேற்று இன்ஸ்டாகிராம் நேரலையில் வந்து ரசிகர்களுடன் உரையாடிய ஸ்ரத்தா இதை கூறினார். தான் வீட்டின் ஒரு அறையிலே நேரத்தை செலவிட்டு வருவதாகவும் எந்த பொருட்களையும் தான் தொடுவதில்லை என்றும் கூறியுள்ளார் .

இந்த நேரலையில் ரசிகர்கள் பலர் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தீர்கள் அதை பற்றி சொல்லுங்கள் என்று கேட்டார்கள். இதற்கு பதிலளித்த நடிகை ஸ்ரத்தா அஜித்தை போன்ற ஒரு ஜென்டில்மேனை நான் பார்த்ததில்லை என்று கூறினார். மேலும் அவருடன் நடித்தது நல்ல அனுபவத்தையும் திரைத்துறையில் பாடத்தை கற்று தந்ததாக கூறினார்.

நேரலையில் பேசிய ஸ்ரத்தா, தனக்கு காதலன் இருப்பதை உறுதி செய்துள்ளார். ரசிகர்கள் உங்களுக்கு காதலன் இருக்கிறாரா என்று திரும்பி திரும்பி கேட்க ஆமாம் எனக்கு பாய்பிரண்ட் இருக்கிறார் போதுமா' என்று கூறி உள்ளார் ஸ்ரத்தா .

shraddha srinath corona quarantine

தற்போது வீட்டில் இருப்பது மிகவும் வெறுப்பாக இருக்கிறது. இதனால் டிக்டாக் செயலியை பதிவிறக்கம் செய்து வைத்திருப்பதாகவும் ஆனால் எப்படி பயன்படுத்துவது என்று தெரியவில்லை நீங்கள் கற்று தாருங்கள் என்று ரசிகர்களை கேட்டுள்ளார் .

shraddha srinath corona quarantine

நடிகை ஸ்ரத்தா மட்டுமில்லாமல் விமான பயணம் மேற்கொண்ட பல பிரபலங்கள் தற்போது வீட்டிலே தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கொரோனா நோய் தொற்று இருக்க வாய்ப்புகள் இருப்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது .

Recommended Video

Soori family Kind advice | Self Qurantine

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X