இது ஸ்ரத்தாவா.. மாதவன் கூட நம்பமாட்டார்.. பெரிய அதிர்ச்சியா இருக்கே.. வைரலாகும் புகைப்படம்!
நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்தின் குண்டாக தோற்றமளிக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
Recommended Video
சென்னை: நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்தின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
மணிரத்னத்தின் காற்றுவெளியிடை படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத். அதன் பிறகு கவுதம் கார்த்திக்குடன் இவன் தந்திரன் படத்தில் நடித்தார்.
விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் வேதா தான் ஸ்ரத்தாவுக்கு திருப்புமுனையாக அமைந்தது. 'யாஞ்சி யாஞ்சி' என சாம் சிஎஸ் மெட்டு போட, நெஞ்சாத்தியாக இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தார்.

விக்ரம் வேதா டு நேர்கொண்ட பார்வை
விக்ரம் வேதாவுக்கு பிறகு தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரத்தா ஸ்ரீநாத். தமிழில் அஜித்துடன் அவர் நடித்த நேர்கொண்ட பார்வை படம் பெரும் வெற்றி பெற்றதால் மேடம் இன்னும் பிஸியாகிவிட்டார்.

பிஸியான நடிகை
தற்போது, தமிழில் இரும்புத்திரை 2, மாறா ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். மேலும் கன்னடத்தில் இரண்டு படங்களிலும் நடிக்கிறார். இந்தியில் ஒரு படத்தில் கமிட் ஆகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

வைரலாகும் புகைப்படம்
இந்நிலையில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் பகிர்ந்த அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. ஐந்து வருடங்களுக்கு முன்பு தனது உடலமைப்பு எப்படி இருந்தது என்பதையும், தற்போது எப்படி இருக்கிறது என்பதையும் ஒப்பிட்டு அந்த புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

குண்டு பெண்
அதில் ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய ஸ்ரத்தா, குண்டு பெண்ணாக இருக்கிறார். இப்போது எடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் ஒல்லி குச்சியாக இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் எப்படி நிகழ்ந்தது இந்த மாற்றம் என வாயடைத்து போய்விட்டனர்.

18 கிலோ குறைப்பு
ஸ்ரத்தா கடந்த ஐந்துஆண்டுகளில் 18 கிலோ எடை குறைத்திருக்கிறாராம். 2014ம் ஆண்டு வழக்கறிஞராக பணியாற்றிய போது அவர் கையில் நிறைய பணம் வந்ததாம். இதையடுத்து, சாப்பாடு, துணிமணி, ஊர்சுற்றுவது என இஷ்டத்துக்கு செலவு செய்ததால் தான் அவரது உடல் எடைக்கூடியதாம்.

வருத்தமில்லை
ஆனால் உடல் எடை கூடியபோதும் தனக்கு தாழ்வு மனப்பான்மை வந்ததே இல்லை என்கிறார் ஸ்ரத்தா. சோம்பேறித்தனம் தான் தனது எடைக்கூட காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒருநாள் தான் குண்டாக இருப்பதை உணர்ந்த ஸ்ரத்தா, அதன் பிறகு உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

அழகாக இருக்க வேண்டும்
முதலில் ஜிம் சென்றபோது 5 நிமிடங்கள் கூட தொடர்ந்து ஓட முடியாதாம். படிப்படியாக 15 நிமிடம், 20 நிமிடம் உயர்ந்து, தற்போது 40 நிமிடங்கள் வரை தன்னால் இடைவேலை இல்லாமல் ஓட முடியும் என ஸ்ரத்தா நம்பிக்கையாக கூறுகிறார். தான் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்ற ஒரே காரணம் தான் அவரை இப்படி எடைக்குறைய வைத்ததாம்.

ரசிகர்கள் ஆச்சர்யம்
ஸ்ரத்தா ஸ்ரீநாத்தின் இந்த புகைப்படம் வைரலாகியுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் குண்டு பெண்ணாக இருந்த ஸ்ரத்தா இப்படி ஒல்லியாக மாறிவிட்டார் என ரசிகர்கள் ஆச்சரிப்படுகின்றனர். ஸ்ரத்தாவின் இந்த புகைப்படத்தை இரண்டு லட்சத்துக்கு அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











