அவன் விரைவில் பழிவாங்கப்படுவான் என பதிவிட்ட அந்த நடிகை! சிக்கப்போவது யார்?
நடிகை ஷ்ரதா கபூர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் போட்டோக்களை நீக்கியது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
Recommended Video

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை ஷரதா கபூரின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுவிட்டதா என ரசிகர்கள் சந்தேகமடைந்துள்ளனர்.
பாலிவுட் நடிகை ஷரதா கபூர் பல படங்களில் நடித்திருந்தாலும், அவருடைய பெயரைக் கேட்டவுடன் நியாபகத்திற்கு வருவது ரொமான்ஸ் மழை பொழிந்த ஆஷிக்2.

ஆதித்யா ராய் கபூர் மழையில் நனைந்தபடியே குடித்துவிட்டு கீழே படுத்து அழும்போது, கண்கள் கலங்கியபடி கவலை தோய்ந்த முகத்தோடு அவரை ஆற்றுப்படுத்த முயலும் காட்சிகளில் கண் கலங்க வைத்திருப்பார் ஷ்ரதா.
இவர் இப்போது சுஜீத் இயக்கத்தில் பாகுபலி புகழ் பிரபாஸுடன் சாகோ என்ற படத்தில் நடித்து வருகிறார். எப்போதுமே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷ்ரதாவின் இன்ஸ்டா அக்கவுன்ட் இப்போது வெறிச்சோடி கிடக்கிறது.
சமீபத்தில் குடும்பத்தினருடன் வெகேஷன் சென்றிருந்த புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய ஷ்ரதா, தற்போது அவருடைய புரொபைல் போட்டோ உள்பட அனைத்தையுமே நீக்கியுள்ளார்.
போட்டோக்களை நீக்கியதோடு மட்டுமல்லாமல் ஒருவரை எச்சரிக்கும் தகவலையும் பதிவிட்டுள்ளார். "மார்த் கோ தார்த் ஹோகா" என ஒற்றை வாசகத்தை மட்டும் பதிவிட்டு பிறகு இன்ஸ்டாகிராம் பக்கம் வரவில்லை.
இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து ஷ்ரதாவின் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக சந்தேகமடைந்தனர்.
இந்த நிலையில், அது ஷ்ரதா கபூர், ராஜ்குமார் ராவ் நடிப்பில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளிவரவிருக்கும் ஹாரர் படமான ஸ்ட்ரீ திரைப்பட புரோமோஷன் எனத் தெரியவந்துள்ளது. அவன் சீக்கிரமாக பழிவாங்கப்படுவான் என இந்தியில் உள்ள சப் டைட்டிலையே ஷரதா கபூர் "மார்த் கோ தார்த் ஹோகா" என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











