»   »  ஷ்ரியாவின் களி நடனம்!

ஷ்ரியாவின் களி நடனம்!

Subscribe to Oneindia Tamil

சிவாஜி படத்தில் நான் சம்பந்தப்பட்ட அத்தனை பாடல்களிலும் படு சந்தோஷமாக ஆடியுள்ளேன் என்று ரஜினி நாயகி ஸ்ரேயா உற்சாகமாக கூறுகிறார்.

திரிஷா நாயகியாக நடிக்க, ஸ்ரேயா 2வது நாயகியாக நடிக்க வெளியான எனக்கு 20 உனக்கு 18 படம்தான் ஸ்ரேயாவுக்கு முதல் தமிழ்ப் படம். முதல் படத்திலேயே கோலிவுட்டின் கண்ணில் சிக்கி கவனிக்கப்பட்டார் ஸ்ரேயா.

ஆனாலும் அவர் பிரபலமானது தெலுங்கில்தான். அங்கிருந்து தமிழுக்கு வந்த மழை படம்தான் ஸ்ரேயாவுக்கு பெரும் பிரபலத்தைக் கொடுத்தது. அந்தப் படத்தை முடித்த கையோடு சிவாஜிக்கு போய் விட்டார் ஸ்ரேயா.

ரஜினியுடன் ஜோடி சேர்ந்த அதிர்ஷ்டமோ என்னவோ விஜய்யுடன் அழகிய தமிழ்கமன், விக்ரமுடன் கந்தசாமி என பிசியாகி விட்டார் ஸ்ரேயா.

தெலுங்கை விட தமிழுக்கே அதிக முக்கியத்துவம் தருகிறாராம் ஸ்ரேயா. சிவாஜி படப்பிடிப்பு முடிந்து விட்டதால் இனி அதிக தமிழ்ப் படங்களில் தன்னைக் காண முடியும் என்கிறார் ஸ்ரேயா.

சரி சிவாஜி அனுபவம் எப்படி இருந்தது என்று ஸ்ரேயாவிடம் கேட்டால், ரஜினி சாருடன் நடிக்கும் வாய்ப்பு அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் கிடைத்து விடாது. எனக்குக் கிடைத்ததை எனது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்வேன்.

ரஜினி சார் ரொம்ப எளிமையானவர். ஸ்பாட்டில் படு ஜாலியாக, கேஷுவலாக பழகுவார், பேசுவார். பல அறிவுரைகளைக் கூறியுள்ளார். படு பிராக்டிகலாக, எதார்த்தமாக பேசுவார்.

யாரையும் பாகுபடுத்திப் பார்க்காமல் சரி சமமாக நினைத்துப் பேசுவார். ஒரு சூப்பர் ஸ்டார் போல தெரியாது அவரது பழக்கத்தைப் பார்த்தால். அவ்வளவு சிம்பிளான மனிதர்.

தான் செய்த சேஷ்டைகள், குறும்புகளை சொல்லி அனைவரையும் சிரிக்க வைப்பார். ஷூட்டிங் ஸ்பாட்டிலும் ஏதாவது செய்து அந்த இடத்தையே கலகலப்பாக மாற்றி விடுவார்.

இப்படத்தில் நடிக்க முடியுமா என்று ஷங்கர் சார் கேட்டபோது ரொம்ப சந்தோஷமாகி விட்டேன். எனது மழை படத்தைப் பார்த்த ஷங்கர் சார், நான் அதில் நடித்திருந்த விதம், எனது தோற்றம் எல்லாவற்றையும் பார்த்து பிரமித்து விட்டுத்தான் என்னை சிவாஜியில் நடிக்கக் கூப்பிட்டார்.

படத்தில் வரும் பாடல்களில் என்னை மிக அழகாக காட்டியிருக்கிறார்கள். அதேபோல நானும் படு சந்தோஷமாக, ஜாலியாக நடனம் ஆடியுள்ளேன். ஒவ்வொரு பாட்டும் சூப்பர் ஹிட் ஆகும் என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தார் ஸ்ரேயா.

உடம்பை இவ்வளவு இளமையாக,பொலிவாக வைத்திருக்கிறீர்களே என்ன ரகசியம் என்று நைஸாக கேட்டோம். ஒன்றும் விசேஷமாக இல்லை சார், தினசரி உடற்பயிற்சி செய்வேன், வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்வதால் உடம்பு நன்றாக இருக்கிறது. அவ்வளவுதான் என்று லேசாக கண் சிமிட்டியபடி சொன்னார் சிவாஜி நாயகி.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil