»   »  நான்..ரஜினி..தனுஷ்: ஸ்ரேயா

நான்..ரஜினி..தனுஷ்: ஸ்ரேயா

Subscribe to Oneindia Tamil

ரஜினி, தனுஷூடன் ஜோடி பெருமைப்படுகிறார் ஷ்ரேயா.

ஒரே நேரத்தில் ரஜினி, அவரது மருமகன் தனுஷ் ஆகியோருடன் நடிப்பதை மிகவும் பெருமையாகநினைக்கிறேன். இது போன்ற வாய்ப்பு யாருக்கும் கிடைக்கும் என்று புளகாங்கிதப்படுகிறார் நடிகை ஷ்ரேயா.

ரஜினி மிக மிக எளிமையானவர். சூப்பர் ஸ்டாருடன் நடிக்கிறோம் என நான் தான் பந்தா செய்து கொள்ளவேண்டும். அவரிடம் பந்தா எதுவும் இல்லை. சிவாஜி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம்.

படப்பிடிப்பு சமயங்களில் ஏகப்பட்ட அறிவுரைகளை சொல்வார். கஷ்டமான காட்சிகளிலும் தன்னுடையஸ்டைலில் அவர் நடிப்பதை பார்த்தது பிரமித்துவிட்டேன். சிவாஜி படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

இப்போது தனுஷூடன் திருவிளையாடல் படத்தில் நடித்து வருகிறேன். தனுஷ் கடும் உழைப்பாளி. எனக்கு மிகநல்ல நண்பர்.

ஒரே சமயத்தில் மாமாவுடனும், மருமகனுடனும் நடிப்பது பற்றி கவலை இல்லை. இதனால் எனது இமேஜ்பாதிக்கும் என்றும் நினைக்கவே இல்லை. திறமையான இரண்டு நடிகர்களுடன் நடிக்கிறேன் என்று மட்டும்நினைக்கிறேன்.

தமிழில் வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன். எல்லா படத்திலும் காலேஜ் கேர்ளாகவந்துவிட்டுப் போக விரும்பவில்லை.

அதே நேரத்தில் படம் ஓடுவதும் ஓடாததும் நம் கையில் இல்லை. ரசிகர்கள் என்னை விரும்புகிறார்கள். அதுவேபோதும் என்கிறார் ஷ்ரேயா.

அப்படியே தெலுங்கில் நாகர்ஜூனாவுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை ஆதித்யாஇயக்குகிறார். இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்தாலும் இன்னும் தனக்கு ஒரு பெரிய அளவில்பிரேக் கிடைக்கவில்லை என்ற வருத்தம் உள்ளூர இருக்கிறதாம் ஷ்ரேயாவுக்கு.

காதலனுடன் மும்பையில் சுற்றுகிறீர்களாமே என்று கேட்டால், அது யாரோ பற்ற வைத்த வதந்தி. எனக்குயாருடனும் காதல் இல்லை. அது தொடர்பாக வரும் செய்திகள் பொய்யானவை என்கிறார்.

நம்பிருவோம்...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil