»   »  'கெட்டி' ஷ்ரேயா ரெட்டி!

'கெட்டி' ஷ்ரேயா ரெட்டி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வெயில், திமிரு, பள்ளிக்கூடம் போன்ற படங்களில் நடிக்க கிடைத்தது போன்ற கெட்டியான ரோலுக்காக காத்திருக்கிறாராம் ஷ்ரேயா ரெட்டி.

எஸ்.எஸ்.மியூசிக்கில், ஃப்ரீக்காக வந்து போய்க் கொண்டிருந்த ஷ்ரேயா ரெட்டியை கூப்பிட்டு தனது திமிரு படத்தில் குமுற வைத்தார் விஷால். ஹீரோயின் ரீமா சென்னை விட இப்படத்தில் ஈஸ்வரி ரோலில் நடித்த ஷ்ரேயா பேசப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அதே டைப்பிலான பட வாய்ப்புகளே ஷ்ரேயாவைத் தேடி வந்ததால் அப்செட் ஆகிப் போனார் ஈஸ்வரி. இதேபோல நான் தொடர்ந்து நடிக்க மாட்டேன். விதம் விதமான கேரக்டர்களில்தான் நடிப்பேன் என்று கூறி வந்தவர்களை திருப்பி அனுப்பினார்.

அந்த நேரத்தில்தான் வெயில் பட வாய்ப்பு தேடி வந்தது. திமிரு படத்தில் அதிரடியாக சரவெடியாக வந்து போன ஷ்ரேயா, வெயில் படத்தில் வெளுத்துப் போன முகத்துடனும், கிழிந்து போன புடவையுடனும் படு பரிதாபக் கோலத்தில் பசுபதிக்கு ஜோடியாக வந்து நடிப்பில் மிரட்டினார்.

இதையடுத்து எப்படிக் கொடுத்தாலும் விளையாடுவார் போலிருக்கே என்று ஷ்ரேயாவைத் தேடி நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவர் பள்ளிக்கூடம் படத்தைத் தேர்வு செய்து நடித்தார். இந்ததப் படத்திலும் அவரது கேரக்டர் பேசப்பட்டது.

மூன்று வெரைட்டியான படங்களில் நடித்து மூன்றிலுமே பாராட்டும் பெற்ற சந்தோஷத்தில் இருக்கிறார் ஷ்ரேயா. இனிமேலும் நல்ல நல்ல கேரக்டர்களைத் தேர்வு செய்தே தொடர்ந்து நடிக்கப் போவதாகவும் கூறி வருகிறார்.

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் கூட கதை கேட்கிறாராம் ரெட்டி. ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்தான் போடுகிறார். நல்ல கேரக்டராக இருக்க வேண்டும், வித்தியாசமானதாக இருக்க வேண்டும், பேசப்படக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதுதான் ஷ்ரேயாவின் ஒரே கண்டிஷனாம்.

ஷ்ரேயாவுக்காவாவது வித்தியாசமான கதைகளையும், கேரக்டர்களையும் யோசியுங்கள் இயக்குநர்களே!

Read more about: shreyareddy

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil