»   »  'சிங்கிளுக்கு' ஷ்ரியா ஸாரி!

'சிங்கிளுக்கு' ஷ்ரியா ஸாரி!

Subscribe to Oneindia Tamil
Shreya
இனிமேல் ஒரு பாட்டுக்கு ஆடுவதில்லை என்ற 'வரலாற்றுச் சிறப்புடைய' முடிவை எடுத்துள்ளாராம் ஷ்ரியா.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடி சேர்ந்ததைத் தொடர்ந்து ஷ்ரியாவைத் தேடி முன்னணி நடிகர்களுடன் இணை சேரும் வாய்ப்பு ஷ்ரியாவைத் தேடி வந்தது. ஆனால் வடிவேலுவுடன் இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடப் போக, வந்த வாய்ப்புகள் பேக் டிராக் ஆகின.

குறிப்பாக அஜீத், ஷ்ரியாவுடன் ஜோடி சேர ரொம்பவே தயங்கியதாக கூறப்பட்டது. மேலும் சில ஹீரோக்களும் ஷ்ரியாவை நிராகரிக்க முடிவு செய்தனர்.

இதனால் குழப்பமான ஷ்ரியா இனிமேல் ஒரு பாட்டுக்கு ஆடுவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளாராம்.

வடிவேலுவுடன் ஆடிய ஒரே காரணத்திற்காக ஷ்ரியாவைத் தேடி வந்த 3 முன்னணி நடிகர்களின் படங்கள் நழுவிப் போனதாம்.

முதலில் ஷ்ரியாவை நிராகரித்த அஜீத், பின்னர் சமரசமாகி தற்போது அவருடன் ஜோடி சேர சம்மதம் தெரிவித்துள்ளார். அதுவும் ஷ்ரியாவே நேரடியாக களம் இறங்கி, அஜீத்தை சந்தித்துப் பேசிய பின்னர்தான் அஜீத் மனம் மாறினாராம்.

இப்போது தன்னைத் தேடி வரும் ஒற்றைப் பாட்டு வாய்ப்புகளை நிராகரித்து வருகிறாராம் ஷ்ரியா.

ஷ்ரியாவின் முடிவை அஜீத்தும் பாராட்டியுள்ளாராம். தாமதமான முடிவு என்றாலும் கூட புத்திசாலித்தனமான ஒன்று என்று கூறினாராம் அஜீத்.

வடிவேலுவுடன் ஆடிய அம்புட்டு பெரிய தவறா?

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil