»   »  ஷ்ரேயா காட்டில் படமழை! மழை நாயகி ஷ்ரேயாவின் கால்ஷீட் நிரம்பத் தொடங்கியுள்ளதாம். மழை படத்தில் அவர் காட்டியுள்ள கவர்ச்சி, தயாரிப்பாளர்களை ரொம்பவே ஈர்த்துவிட்டதாம். இதனால் பணப் பெட்டி வரிசையாக வரத் தொடங்கியுள்ளது.தெலுங்கு கன்னியான ஷ்ரேயா தமிழுக்குப் புதிதில்லை.ஏற்கனவே எனக்கு 18 உனக்கு 16 என்ற படத்தில் குட்டை ஷார்ட்ஸ் அணிந்து, குலுங்க குலுங்ககிளுகிளுப்பூட்டியவர்தான் ஷ்ரேயா. அதில் அவர் இரண்டாவது ஹீரோயின்தான் என்றாலும் முதல் ஹீரோயினான திரிஷாவுக்கு ஈடாக, ரசிகர்கள் நெஞ்சில்மஞ்சம் போட்டமர்ந்தார்.திரிஷா தெலுங்கில் நடித்து மிகப் பெரும் வெற்றி பெற்ற வர்ஷம் படத்தை பின்னணிப் பாடகர் தமிழில் மழை என்ற பெயரில் தயாரிக்க முடிவு செய்தவுடன்,ஹீரோயினாக திரிஷாவைத் தான் முதலில் நாடினர். ஆனால் தெலுங்கைப் போல தமிழிலும் கவர்ச்சியைக் காட்ட முடியாது என்று திரிஷா முரண்டியதால்,ஷ்ரேயாவைப் பிடித்துப் போட்டு படத்தைத் தொடங்கினர்.ஷ்ரேயாவும் தனக்குக் கிடைத்த இந்த அரிய வாய்ப்பை விட்டு விடாமல் ரொம்பே விரும்பி கவர்ச்சி பூபாளம் பாடி கலக்கியுள்ளார். மழையில் அவர்காட்டிய கவர்ச்சி சற்றும் சிந்தாமல் சிதறாமல், வீணாகாமல் கை மேல் பலன் கொடுக்கத் தொடங்கியுள்ள ஷ்ரேயாவுக்கு.இப்போது அவரைத் தேடி 3 படங்கள் ஓடோடி வந்துள்ளதாம். மூன்றிலும் கிளாமர் கடலில் முத்துக் குளிக்கம் வகையில் படு தோதாகஅமைந்துள்ளதாம். இருப்பினும் இப்போதைக்கு ஒரு படத்தை மட்டும் அவர் ஒத்துக் கொண்டுள்ளாராம்.தனுஷ் ஜோடியாக அவர் நடிக்கப் போகும் அந்தப் படத்தை பூபதிபாண்டியன் இயக்கவுள்ளார். இவர்தான் தனுஷை வைத்து தேவதையைக் கண்டேன் படத்தைக்கொடுத்தவர். சரிந்து போய்க் கிடக்கும் தனுஷுக்கு கொஞ்சம் போல நிவாரணமாக அமைந்தது தேவதைடையக் கண்டேன்.எனவே இந்தப் படத்தை மலை போல நம்பி, சூப்பராக நடிக்க தீர்மானித்துள்ளார் தனுஷ் தம்பி. ஷ்ரேயாவும் இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில்நிரந்தரமாக ஒரு இடத்தைப் பிடிக்க முடிவு செய்துள்ளார்.மழை வெளிவந்ததும், காய்ந்து போன காவிரி ஆற்றை நனைத்த மேட்டூர் அணை நீர் போல, ரசிகர்களையும் குளிர வைத்து விடலாம் என்று அம்மணி படுநம்பிக்கையுடன் பட ரிலீஸுக்காக காத்துக் கிடக்கிறார்.ரொம்ப சந்தோஷம்!

ஷ்ரேயா காட்டில் படமழை! மழை நாயகி ஷ்ரேயாவின் கால்ஷீட் நிரம்பத் தொடங்கியுள்ளதாம். மழை படத்தில் அவர் காட்டியுள்ள கவர்ச்சி, தயாரிப்பாளர்களை ரொம்பவே ஈர்த்துவிட்டதாம். இதனால் பணப் பெட்டி வரிசையாக வரத் தொடங்கியுள்ளது.தெலுங்கு கன்னியான ஷ்ரேயா தமிழுக்குப் புதிதில்லை.ஏற்கனவே எனக்கு 18 உனக்கு 16 என்ற படத்தில் குட்டை ஷார்ட்ஸ் அணிந்து, குலுங்க குலுங்ககிளுகிளுப்பூட்டியவர்தான் ஷ்ரேயா. அதில் அவர் இரண்டாவது ஹீரோயின்தான் என்றாலும் முதல் ஹீரோயினான திரிஷாவுக்கு ஈடாக, ரசிகர்கள் நெஞ்சில்மஞ்சம் போட்டமர்ந்தார்.திரிஷா தெலுங்கில் நடித்து மிகப் பெரும் வெற்றி பெற்ற வர்ஷம் படத்தை பின்னணிப் பாடகர் தமிழில் மழை என்ற பெயரில் தயாரிக்க முடிவு செய்தவுடன்,ஹீரோயினாக திரிஷாவைத் தான் முதலில் நாடினர். ஆனால் தெலுங்கைப் போல தமிழிலும் கவர்ச்சியைக் காட்ட முடியாது என்று திரிஷா முரண்டியதால்,ஷ்ரேயாவைப் பிடித்துப் போட்டு படத்தைத் தொடங்கினர்.ஷ்ரேயாவும் தனக்குக் கிடைத்த இந்த அரிய வாய்ப்பை விட்டு விடாமல் ரொம்பே விரும்பி கவர்ச்சி பூபாளம் பாடி கலக்கியுள்ளார். மழையில் அவர்காட்டிய கவர்ச்சி சற்றும் சிந்தாமல் சிதறாமல், வீணாகாமல் கை மேல் பலன் கொடுக்கத் தொடங்கியுள்ள ஷ்ரேயாவுக்கு.இப்போது அவரைத் தேடி 3 படங்கள் ஓடோடி வந்துள்ளதாம். மூன்றிலும் கிளாமர் கடலில் முத்துக் குளிக்கம் வகையில் படு தோதாகஅமைந்துள்ளதாம். இருப்பினும் இப்போதைக்கு ஒரு படத்தை மட்டும் அவர் ஒத்துக் கொண்டுள்ளாராம்.தனுஷ் ஜோடியாக அவர் நடிக்கப் போகும் அந்தப் படத்தை பூபதிபாண்டியன் இயக்கவுள்ளார். இவர்தான் தனுஷை வைத்து தேவதையைக் கண்டேன் படத்தைக்கொடுத்தவர். சரிந்து போய்க் கிடக்கும் தனுஷுக்கு கொஞ்சம் போல நிவாரணமாக அமைந்தது தேவதைடையக் கண்டேன்.எனவே இந்தப் படத்தை மலை போல நம்பி, சூப்பராக நடிக்க தீர்மானித்துள்ளார் தனுஷ் தம்பி. ஷ்ரேயாவும் இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில்நிரந்தரமாக ஒரு இடத்தைப் பிடிக்க முடிவு செய்துள்ளார்.மழை வெளிவந்ததும், காய்ந்து போன காவிரி ஆற்றை நனைத்த மேட்டூர் அணை நீர் போல, ரசிகர்களையும் குளிர வைத்து விடலாம் என்று அம்மணி படுநம்பிக்கையுடன் பட ரிலீஸுக்காக காத்துக் கிடக்கிறார்.ரொம்ப சந்தோஷம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மழை நாயகி ஷ்ரேயாவின் கால்ஷீட் நிரம்பத் தொடங்கியுள்ளதாம். மழை படத்தில் அவர் காட்டியுள்ள கவர்ச்சி, தயாரிப்பாளர்களை ரொம்பவே ஈர்த்துவிட்டதாம். இதனால் பணப் பெட்டி வரிசையாக வரத் தொடங்கியுள்ளது.

தெலுங்கு கன்னியான ஷ்ரேயா தமிழுக்குப் புதிதில்லை.ஏற்கனவே எனக்கு 18 உனக்கு 16 என்ற படத்தில் குட்டை ஷார்ட்ஸ் அணிந்து, குலுங்க குலுங்ககிளுகிளுப்பூட்டியவர்தான் ஷ்ரேயா. அதில் அவர் இரண்டாவது ஹீரோயின்தான் என்றாலும் முதல் ஹீரோயினான திரிஷாவுக்கு ஈடாக, ரசிகர்கள் நெஞ்சில்மஞ்சம் போட்டமர்ந்தார்.

திரிஷா தெலுங்கில் நடித்து மிகப் பெரும் வெற்றி பெற்ற வர்ஷம் படத்தை பின்னணிப் பாடகர் தமிழில் மழை என்ற பெயரில் தயாரிக்க முடிவு செய்தவுடன்,ஹீரோயினாக திரிஷாவைத் தான் முதலில் நாடினர். ஆனால் தெலுங்கைப் போல தமிழிலும் கவர்ச்சியைக் காட்ட முடியாது என்று திரிஷா முரண்டியதால்,ஷ்ரேயாவைப் பிடித்துப் போட்டு படத்தைத் தொடங்கினர்.


ஷ்ரேயாவும் தனக்குக் கிடைத்த இந்த அரிய வாய்ப்பை விட்டு விடாமல் ரொம்பே விரும்பி கவர்ச்சி பூபாளம் பாடி கலக்கியுள்ளார். மழையில் அவர்காட்டிய கவர்ச்சி சற்றும் சிந்தாமல் சிதறாமல், வீணாகாமல் கை மேல் பலன் கொடுக்கத் தொடங்கியுள்ள ஷ்ரேயாவுக்கு.

இப்போது அவரைத் தேடி 3 படங்கள் ஓடோடி வந்துள்ளதாம். மூன்றிலும் கிளாமர் கடலில் முத்துக் குளிக்கம் வகையில் படு தோதாகஅமைந்துள்ளதாம். இருப்பினும் இப்போதைக்கு ஒரு படத்தை மட்டும் அவர் ஒத்துக் கொண்டுள்ளாராம்.

தனுஷ் ஜோடியாக அவர் நடிக்கப் போகும் அந்தப் படத்தை பூபதிபாண்டியன் இயக்கவுள்ளார். இவர்தான் தனுஷை வைத்து தேவதையைக் கண்டேன் படத்தைக்கொடுத்தவர். சரிந்து போய்க் கிடக்கும் தனுஷுக்கு கொஞ்சம் போல நிவாரணமாக அமைந்தது தேவதைடையக் கண்டேன்.


எனவே இந்தப் படத்தை மலை போல நம்பி, சூப்பராக நடிக்க தீர்மானித்துள்ளார் தனுஷ் தம்பி. ஷ்ரேயாவும் இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில்நிரந்தரமாக ஒரு இடத்தைப் பிடிக்க முடிவு செய்துள்ளார்.

மழை வெளிவந்ததும், காய்ந்து போன காவிரி ஆற்றை நனைத்த மேட்டூர் அணை நீர் போல, ரசிகர்களையும் குளிர வைத்து விடலாம் என்று அம்மணி படுநம்பிக்கையுடன் பட ரிலீஸுக்காக காத்துக் கிடக்கிறார்.

ரொம்ப சந்தோஷம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil