»   »  கமல் படத்தில் ஷ்ரேயா

கமல் படத்தில் ஷ்ரேயா

Posted By:
Subscribe to Oneindia Tamil
சிவாஜியில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஆடிப் பாடி வரும் ஷ்ரேயா அடுத்துகமலுடனும் ஜோடி போடப் போகிறார்.

கமல்ஹாசன் பத்து வேடங்கள் புணையும் தசாவதாரம் படத்தில் த்ரிஷா, நயனதாரா,ஆசின் ஆகியோர் நடிப்பதாக செய்திகள் வெளியாகிய நிலையில் இப்போது படத்தில்கமல்ஹாசனுக்கு ஒரே ஒரு ஹீரோயின்தான் என்று புதுச் செய்தி வெளியாகியுள்ளது.

கமலுடன் ஜோடியாக நடிக்கவுள்ள அந்த முக்கியமான ஹீரோயினை தேர்வு செய்யபலரது தலைகளையும் கமல் மற்றும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அலசி ஆராய்ந்துவித்யா பாலனை முடிவு செய்தார்கள். இதையடுத்து வித்யாவிடம் கமல்ஹாசனேநேரடியாக போனில் தொடர்பு கொண்டாராம்.

கமல்ஹாசனே நேரில் பேசியதால் சந்தோஷமடைந்த வித்யா கண்டிப்பாக நடிக்கிறேன்என்று கூறியுள்ளார். இதையடுத்து கதையைக் கூறி கமல், மொத்தமாக 90 நாட்கள்கால்ஷீட் தேவைப்படும் என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்டதும் குழம்பி விட்டார் வித்யா. காரணம் மொத்தமாக 3 மாதங்களுக்குகால்ஷீட் தருவதில் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கையில் சில இந்திப் படங்கள்இருப்பதால் அத்தனை நாட்கள் தர முடியாதே என்று வித்யா கூறியுள்ளார்.

முயற்சித்துப் பாருங்களேன் என்று கமல் கோர, ஸாரி கமல்ஜி, அத்தனை நாட்களுக்குஅட்ஜஸ்ட் செய்வது சிரமம் என்று கூறி விட்டார் வித்யா.

இதனால் சோர்ந்து போன கமல் சரி அப்படியானால் அடுத்த படத்தில் சந்திப்போம்என்று கூறிவிட்டார்.

இதையடுத்து வேறு யாரை ஜோடியாக்கலாம் என்று கமலும், ரவிக்குமாரும்யோசித்துப் பார்த்துள்ளனர். அப்போதுதான் சிவாஜி பட நாயகி ஷ்ரேயாவை கேட்டால்என்ன என்று ரவிக்குமார் யோசனை தெரிவிக்க, குட் ஐடியா என்று சந்தோஷமானகமல், அவரிடம் பேசிப் பாருங்கள் என்று பொறுப்பை ரவிக்குமாரிடமேஒப்படைத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து ஷ்ரேயாவைப் பிடித்த ரவிக்குமார் ரெடியா என்று கேட்டுள்ளார்.குஷியாகி விட்ட ஷ்ரேயா அய்யா, இப்படி ஒரு வாய்ப்பைத்தானேஎதிர்பார்த்திருந்தேன், நிச்சயம் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

அதே 90 நாள் மேட்டரை ஷ்ரேயாவிடம் தெரிவித்தார் ரவிக்குமார்.

வித்யாவைப் போலவே ஷ்ரேயாவும் இதைக் கேட்டதும் தர்மசங்கடத்தில் மூழ்கிவிட்டாராம்.

திருவிளையாடலிலும் சிவாஜியிலும் இன்னும் பல காட்சிகள் படமாக்கப்படவேண்டியுள்ளது. அதை முடித்து விட்டால் நான் ஃப்ரீ ஆகி விடுவேன் என்று கூறியஷ்ரேயா, நான் ஷங்கர் சாரிடமும், ரஜினி சாரிடமும் பேசி எப்படியாவது உங்களுக்குகால்ஷீட் தந்து விடுகிறேன். நிச்சயம் நான் நடிக்கிறேன் என்று உறுதியாககூறியுள்ளாராம்.

சிவாஜி படத்தன்றே தசாவதாரத்தையும் ரிலீஸ் செய்ய கமல் உறுதியாக உள்ளார். அதேஉறுதியோடு ரவிக்குமாரும் உள்ளார். எனவே சீக்கிரமே படத்தை ஆரம்பிக்கப்போகிறார்கள்.

அதற்கு முன்னோட்டமாக சமீபத்தில் கமலும், ரவிக்குமாரும் லண்டன் சென்றுஹாலிவுட் மேக்கப்மேன் வெஸ்ட்மூரை வைத்து பல விதமான மேக்கப்கள் போட்டுப்பார்த்து கடைசியில் கமல்ஹாசனின் 10 வேடங்களை இறுதி செய்துவிட்டுவந்துவிட்டார்கள்.

கமலும் மூரும் சேர்ந்து உருவாக்கிய வேடங்களைப் பார்த்து அசந்து போய்விட்டாராம் ரவிக்குமார்.

அந்த வேடங்களில் கமல்ஹாசனை சென்னையில் நடமாட விட்டால் யாராலும்அடையாளம் காணவே முடியாது என்று அடித்துச் சொல்கிறார் ரவிக்குமார்.

இப்போது, ஷ்ரேயாவின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறார்கள் கமலும், ரவிக்குமாரும்.

ஆனால் சிவாஜி படத்தில் நடித்துக் கொண்டிருப்பவர்கள் அந்தப் படம் முடியும் முன் வேறு படத்தில் நடிக்கக்கூடாது என்று ஷங்கர் கண்டினஷாக சொல்லியுள்ளாராம். இந்த உத்தரவு ஷ்ரோயவுக்கும் பொருந்தும் என்பதால்அவர் எப்படி கமல் படத்திற்கு கால்ஷீட் கொடுக்கப் போகிறார் என்று தெரியவில்லை.

தேவைப்பட்டால் கமலே ரஜினியிடம் பேசுவார் என்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil