»   »  நாயகியாகும் ஷ்ரேயா!

நாயகியாகும் ஷ்ரேயா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திமிரு ஷ்ரேயா ரெட்டி இப்போது நாயகியாகி விட்டார். திமிரு இயக்குநர்தருண்கோபியின் அடுத்த படத்தில் ஷ்ரேயா தான் ஹீரோயினாம்.

விஷாலுக்கு புதிய அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்த படம் திமிரு. அத்தோடு ஷ்ரேயாரெட்டிக்கும் புதிய பாதை போட்டுக் கொடுத்துள்ளது.

ஈஸ்வரி என்ற கேரக்டரில், சத்தம் போட்டுப் பேசியே சத்தம் போடாமல் பெரியஆளாகி விட்டார் ஷ்ரேயா ரெட்டி. இந்தப் படத்தில் அவர் போட்ட போட்டைப் பார்த்துஅதே டைப்பிலான கேரக்டர்கள் செய்ய ஏராளமான வாய்ப்புகள் வந்ததாம்.

ஆனால் ஷ்ரேயாதான் வேண்டாம் என்று சொல்லி விட்டாராம். இந்த நேரத்தில்ஷ்ரேயாவை அணுகிய திமிரு இயக்குநர் தருண் கோபி, நீங்கதான் என்னோட அடுத்தபடத்துக்கு ஹீரோயின் என்று கூற சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போய் விட்டாராம்ஷ்ரேயா.

கதை என்னவென்று கூட கேட்காமல் சரி நடிக்கிறேன் என்று கூறி விட்டாராம்.அத்தோடு நிற்காத தருண்கோபி, இப்படத்தை நீங்களே தயாரியுங்கள் (ஷ்ரேயா ரெட்டிபெரும் பண பார்ட்டி!) என்றும் கூறியுள்ளார்.

இதை டபுள் சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டுள்ளாராம் ஷ்ரேயா. விரைவில் ஷ்ரேயாஹீரோயின் அவதாரம் எடுக்கவுள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகுமாம்.

இந்தப் படத்திலும் ஷ்ரேயாவுக்கு வித்தியாசமான ரோல்தானாம். திமிரு படத்தில்ஈஸ்வரி என்ற பாத்திரம் மூலம் ஷ்ரேயாவின் நடிப்புத் திறமையை வெளிக் கொண்டுவந்த தருண்கோபி, புதிய படம் மூலம் ஒரு கதாநாயகிக்குரிய தகுதி ஷ்ரேயாவுக்குஉள்ளது என்பதை நிரூபித்துக் காட்டப் போகிறாராம். அசத்துங்க!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil