திரிஷா இடத்தில் ஷ்ரியா!

By Staff

திரிஷா தெலுங்கில் நடித்த ஒக்கடு இந்திக்குப் போகிறது. திரிஷா ரோலில் ஷ்ரியா நடிக்கவுள்ளார்.

தெலுங்கில் ஆரம்பித்து தமிழிலில் பிக்கப் ஆனவர் ஷ்ரியா. சிவாஜி படத்தில் நடிப்பதற்கு முன்பு இருந்த ஷ்ரியாவின் மார்க்கெட் படு அடக்கமானதாக இருந்தது. ஆனால் சிவாஜிக்குப் பிறகு விஸ்வரூபம் எடுத்துள்ளது.

விஜய், அஜீத் என பிரபல ஹீரோக்களுடன் தொடர்ந்து ஜோடி போட ஆரம்பித்துள்ள ஷ்ரியா, இந்தியிலும் தலை காட்டி விட்டார். அங்கு அவர் நடித்த ஆவாராபன் படம் சூப்பர் ஹிட். இதனால் இந்தியிலும் ராசியான நடிகையாக மாறியுள்ளார் ஷ்ரியா.

இந்த நிலையில் இன்னொரு இந்திப் படத்தில் தற்போது நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் தெலுங்கிலிருந்து இந்திக்குப் போகிறது. தெலுங்கில் மெகா ஹிட் படமான ஒக்கடுதான் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது.

தெலுங்கு ஒக்கடுவில் திரிஷா நடித்திருந்தார். இந்த நிலையில் இந்தி ஒக்கடுவில் ஷ்ரியா நடிக்கவுள்ளார். தமிழில் கை நிறையப் படங்கள் இருந்தபோதிலும் இந்தியிலும் அதிக கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளாராம் ஷ்ரியா.

ஸ்ரீதேவியைப் போல இந்தியைக் கலக்கும் திட்டம் ஷ்ரியாவின் மனசில் உள்ளதாம். அதனால்தான் தமிழிலும், தெலுங்கிலும் கை நிறையப் படங்கள் இருந்தாலும் இந்தியிலும் அதிக கவனம் செலுத்த அவர் தீர்மானித்துள்ளாராம்.

ஏற்கனவே ஆசின் இந்திக்குப் போயுள்ளார். அவர் அமீர்கானுடன் ஜோடி போட்டு நடித்து வரும் கஜினி அங்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஷ்ரியாவும் தனது அலையை பாலிவுட்டில் பரப்ப ஆரம்பித்துள்ளார்.

தென்னகத்திலிருந்து அடுத்து பாலிவுட்டுக்குக் கிளம்பப் போவது யாரோ?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X