»   »  கதை சொல்லும் ஷ்ரியா

கதை சொல்லும் ஷ்ரியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோலிவுட் நாயகிகளிலேயே படு ஜாலியாக இருப்பவர் மழை நாயகி ஷ்ரியா தான்.ஒரே நேரத்தில் மாமனார் ரஜினியுடனும், மருமகன் தனுஷுடனும் சேர்ந்து சதாய்த்துவருவதால் வந்த மகிழ்ச்சிதான் இது.

சிவாஜி படத்தில் நடிக்க புக் ஆவதற்கு முன்பே ஷ்ரியா நடிக்க ஒப்புக் கொண்ட படம்தனுஷின் திருவிளையாடல். இப்படத்தில் நடிக்க ஆரம்பித்திருந்த நிலையில்தான்சிவாஜி பட வாய்ப்பு வந்தது.

இதையடுத்து ரஜினி படத்தில் ஷ்ரியா நடிக்கப் போய் விட்டதால் திருவிளையாடல்பட யூனிட் ஷ்ரியா திரும்பி வரும் வரை காத்திருந்தது. சிவாஜி படத்தில் தனதுகாட்சிகள் முக்கால்வாசி முடிந்து விட்ட நிலையில், திருவிளையாடல் படத்திற்குத்திரும்பினார் ஷ்ரியா.

திருவிளையாடல் படப்பிடிப்பு இடைவேளைகளில் ஷ்ரியா சொல்லும் கதைகள்தான்ஹாட்டாக இருந்ததாம். காரணம் அவர் சொல்லும் கதைகள் எல்லாம் சிவாஜி படம்பற்றியதால்தான். தனுஷ் உள்பட அத்தனை பேரும் ஷ்ரியாவை சுற்றி உட்கார்ந்துகொள்ள அம்மணியின் கதை சொல்லும் படம் தொடங்குமாம்.

ரஜினியுடன் டான்ஸ் ஆடியது, ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி செய்யும் சேஷ்டைகள்,குறும்புகள், கலாய்ப்புகளை கதை கதையாக சொல்லி மகிழ்ந்தாராம் ஷ்ரியா.அத்தோடு ரஜினியுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிய கதையைத்தான் தனுஷ் அதிகம் கேட்டுமகிழ்ந்தாராம்.

ஃபாஸ்ட் மூவ்மென்ட்டுகளை கூட படு லாவகமாக கிரகித்துக் கொண்டு ஆடிக்கலக்கினார் ரஜினி என்று சொல்லி சிலாகிக்த ஷ்ரியா, அவர் எப்படி டான்ஸ் ஆடினார்என்பதையும் ஆடிக் காட்டி கூட்டத்தை பரவசப்படுத்தினாராம்.

அங்கிள் கூட அனுபவத்தை சொல்லுங்க, சொல்லுங்க என்றுதான் நச்சுப்பண்ணினாராம் தனுஷ். கதை கேட்டுக் கொண்டிருந்த ஒரு குறும்புப் பார்ட்டி,ஆட்டகத்தில் கலக்கியது யார் மாமாவா, மாப்பிள்ளையா என்று கேட்க, வெட்கமாகிப்போன ஷ்ரியா, அதை மட்டும் சொல்ல மாட்டேன், பரம ரகசியம் என்று டபாய்த்துவிட்டாராம்.

சிவாஜி படமும் சரி, திருவிளையாடலும் சரி இரண்டுமே சூப்பராக வந்திருக்கிறது.இரண்டிலுமே எனது கேரக்டர் ரொம்பவே பேசப்படும். அதன் பிறகு எனது ரேஞ்சேவேற என்று சொல்லிக் கொண்டிருக்கிறாராம் ஷ்ரியா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil