விபச்சாரியாக நடிக்க வெட்கப்படவில்லை! - ஸ்ரேயா

By Shankar

தெலுங்குப் படத்தில் விபச்சாரி வேடத்தில் நடித்ததற்காக வெட்கப்படவில்லை என்று நடிகை ஸ்ரேயா தெரிவித்தார்.

எனக்கு 20 உனக்கு 18 படம் மூலம் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஆங்கிலம் ஆகிய 7 மொழிகளில், இதுவரை 45 படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரேயா.

இப்போது 'பவித்ரா' (தெலுங்கு) என்ற தெலுங்குப் படத்தில், அவர் விபசார அழகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை ஜனார்த்தன் மகரிஷி என்பவர் இயக்கியுள்ளார்.

பாலியல் சம்பந்தப்பட்ட கதை என்பதால், இந்த படத்துக்கு தணிக்கை குழுவினர், 'ஏ' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். படம், ஆந்திராவில் வருகிற 24-ந்தேதி திரைக்கு வருகிறது.

விபசார அழகியாக நடித்த அனுபவம் குறித்து ஸ்ரேயா கூறுகையில், "என்னுடைய சிறந்த படங்களில் ஒன்று பவித்ரா என நான் நம்புகிறேன். விபசார அழகியாக நடிப்பதற்கு நான் வெட்கப்படவில்லை. பாலியல் சம்பந்தப்பட்ட கதை என்றாலும், இந்த படத்தில் ஆபாசம் துளி கூட இல்லை. குறிப்பாக, படுக்கை அறை காட்சிகள் இல்லை.

படத்தின் கதைப்படி, நான் விபசார அழகியாக இருந்து அரசியல் தலைவர் ஆகிவிடுவேன். ஏழை - எளிய, ஆதரவற்ற பெண்களை கயவர்களிடம் இருந்து பாதுகாத்து, அவர்களுக்கு அடைக்கலம் அளிப்பது போன்ற வேடம் அது," என்றார்.

தமிழில் தொடர்ந்து படங்கள் இல்லாவிட்டாலும், தெலுங்கில் அடுத்து நாகார்ஜூன் படத்தில் நாயகியாக நடிக்கிறார் ஸ்ரேயா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X