தமிழ் - கன்னடத்தில் 'சந்திரா'... ஸ்ரேயாவுக்கு ஜோடியாக கணேஷ் வெங்கட்ராம்!

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ரேயா. தமிழில் இவர் கடைசியாக ஜீவா உடன் 'ரௌத்திரம்' படத்தில் நடித்திருந்தார்.
சீயான் விக்ரமின் 'ராஜபாட்டை' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வந்தார். அதன் பிறகு தமிழில் இவருக்குப் படங்கள் இல்லை. மலையாளம், ஹிந்தி, தெலுங்கு மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.
இப்போது மீண்டும் தமிழில் களமிறங்குகிறார் ஸ்ரேயா. அந்தப் படம் சந்திரா. கன்னடத்திலும் ஒரே நேரத்தில் இந்தப் படம் தயாராகிறது.
இப்படத்தில் ஸ்ரேயாவிற்கு ஜோடியாக கணேஷ் வெங்கட்ராமன் நடிக்கிறார். இவர் 'அபியும் நானும்' படத்தில் திரிஷாவின் காதலனாக நடித்தவர். கமலின் 'உன்னைப் போல் ஒருவன்' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தவர். 'பனித்துளி' படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
இப்படத்தின் மூலம் இவர் மீண்டும் தமிழில் நடிக்க வருகிறார். கன்னட நடிகர் பிரேம் இப்படத்தின் மற்றொரு நாயகனாக நடிக்கிறார். ஒரு அரசபரம்பரையின் கடைசி இளவரசியாக ஸ்ரேயா இப்படத்தில் நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











