பாலா படத்தில் கரகாட்டக்காரியாக வரும் ஸ்ரேயா!

By Shankar

தமிழ் சினிமா உலகே கிட்டத்தட்ட மறந்துபோன ஸ்ரேயா, கைப்பிடித்து அழைத்து வருகிறார் இயக்குநர் பாலா, தனது புதிய படத்துக்கு ஹீரோயினாக.

பாலா இயக்கும் கரகாட்ட கதை படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ரேயா.

சிவாஜிக்குப் பிறகு

சிவாஜிக்குப் பிறகு

எனக்கு 20 உனக்கு 18 மூலம் தமிழில் அறிமுகமானவர் ஸ்ரேயா. ரஜினி ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்த பிறகு இந்தியாவின் பல மொழிப் படங்களிலும் விரும்பப்படும் நட்சத்திரமானார்.

விஜய், விக்ரம், தனுஷ், ஜீவா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார். தெலுங்கிலும் பெரிய ஹீரோக்களுடன் நடித்தார்.

வாய்ப்பில்லை

வாய்ப்பில்லை

ஆனால் சமீப காலமாக இளம் நடிகைகள் ஆதிக்கம் செலுத்தியதால் ஸ்ரேயாவுக்கு வாய்ப்புகள் இல்லாமல் போயின. தொடர்ந்து மார்க்கெட்டை தக்க வைக்க முடியவில்லை. மூத்த ஹீரோக்கள்கூட அவரை அழைக்கவில்லை.

வெளிநாட்டு நிகழ்ச்சிகள்

வெளிநாட்டு நிகழ்ச்சிகள்

இதனால் ஸ்ரேயா மார்க்கெட் சரிந்தது. தமிழில் அவருக்கு படங்களே இல்லை. இயகக்குநர்கள் கண்டு கொள்ளவில்லை. கடைசியாக ஜீவா ஜோடியாக நடித்த ‘ரௌத்திரம்' படம் 2011ல் வந்தது. அதே வருடம் ராஜபாட்டை படத்தில் விக்ரமுடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார். எனவே வெளிநாடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்குப் போய் வந்தார்.

சந்திரா

சந்திரா

சமீபத்தில் கன்னடத்தில் நடித்த சந்திரா படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டனர். மேலும் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார்.

பாலா

பாலா

இந்த நிலையில் ஸ்ரேயாவை அழைத்து கரகாட்டத்தை மையமாக வைத்து எடுத்து வரும் படத்தில் கதாநாயகியாக்கியுள்ளார் இயக்குநர் பாலா. ஸ்ரேயா சிறந்த பரத நாட்டிய டான்சர். இந்த படத்துக்கு நடனம் தெரிந்தவர் தேவை என்பதால் ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்துள்ளார். படத்துக்கு இசை இளையராஜா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X