ஆசினின் புது ரசிகை!
| Click here for more images |
தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்கும் கடும் போட்டியில் இருப்பவர்கள் ஷ்ரியாவும், ஆசினும். வெளியில் பார்க்க அப்படித்தான் தெரிகிறது. ஆனால் நிஜத்தில் வேறு மாதிரியாக இருக்கிறது.
ஆசினைப் பற்றி புகழ்ந்து பேசித் தள்ளுகிறார் ஷ்ரியா. ஆசின் குறித்து ஷ்ரியா கூறுகையில், ஆசினும், நானும் நல்ல பிரண்ட்ஸ். அதிலும் எனது அம்மாவுக்கு ஆசின் என்றால் ரொம்பப் பிடிக்கும். கஜினியைப் பார்த்த பின்னர் ஆசினின் தீவிர ரசிகையாகி விட்டார் அவர்.
ஆசின் ஒரு சிறந்த நடிகை. அவரை நான் ரொம்ப நேசிக்கிறேன். என்னை விட எனது அம்மாதான் ஆசினின் தீவிர ரசிகை. அவர் நடித்த கஜினி, சிவகாசி, போக்கிரி, தெலுங்கில் அவர் நடித்த அம்மா நானா ஒக்க தமிழ் அம்மாயி ஆகிய படங்களைப் பார்த்துள்ளேன்.
ஆமிர்கானே ஆசினை தனது ஜோடியாக தேர்ந்தெடுத்ததிலிருந்தே அவரது திறமையைப் புரிந்து கொள்ளலாம். நாங்கள் இருவரும் நல்ல தோழிகள், எதிரிகள் அல்ல என்று ஆசினைப் புகழ்கிறார் ஷ்ரியா.
ஆசின் ஓ.கே, திரிஷாவுடன் உங்களது நட்பு எப்படி என்று கொக்கியைப் போட்டால், நாங்களும் நல்ல தோஸ்துகள்தான். அவ்வப்போது சந்தித்துக் கொள்வோம். எங்களுக்குள் போட்டி நிலவுவதாக வரும் செய்திகள் எல்லாம் வதந்தியே. நான் யாரையுமே போட்டியாக நினைத்துக் கொண்டதில்லை என்றார் படு டிப்ளமேட்டிக்காக.
சந்தோஷமுங்க!


Click it and Unblock the Notifications