twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இளையராஜா இசையில் ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றில் இளவரசி வேடத்தில் ஸ்ரேயா!

    By Shankar
    |

    ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கை வரலாறு சினிமாவாகிறது. கவிஞர் வாலி மறைவதற்கு முன்பே எழுதிய பாடல்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

    சாதிகளற்ற சமுதாயம், எல்லா மதத்தினருக்கும் நற்கதி, பார்ப்பணர் என்ற பெயரில் நிலவிய பாகுபாட்டுக்கு எதிர்ப்பு என புரட்சியாளராய் வாழ்ந்த மகான் ஸ்ரீராமனுஜர்.

    அவரது வாழ்க்கை வரலாற்றை சொல்லும் இந்தப் படத்தை இயக்குகிறார் ரவி.வி சந்தர். இதில் டெல்லியை ஆண்ட பாதுஷாவின் மகளான பீவி நாச்சியார் வேடத்தில் நடிக்கிறார் ஸ்ரேயா.

    Shriya to play princess role in Sri Ramanujar

    இவருடன், ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, டெல்லிகணேஷ், ஸ்ரீமன் என ஒரு அனுபவம் வாய்ந்த நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடிக்கிறார்கள்.

    இளையராஜா - வாலி

    மறைந்த கவிஞர் வாலியின் பாடல்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். ஹைகிரீவா சினி ஆர்ட்ஸ் என்ற நிறுவனம் சார்பாக டி.கிருஷ்ணன், பிஆர் சேதுராமன் இருவரும் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

    இந்தப் படத்திற்காக தற்போது ஏவி.எம்.ஸ்டுடியோவில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

    ஏற்கனவே 'சந்திரா' படத்தில் மகாராணி சந்திராவதியாக நடித்த ஸ்ரேயா, தற்போது நீண்ட இடைவெளிக்குப்பிறகு தமிழில் 'ஸ்ரீ ராமானுஜர்' என்ற புராணப்படத்தில் நடிக்கிறார். பாலாவின் புதுப் படத்தில் கரகாட்டக் கலைஞராகவும் நடிக்கிறார்.

    English summary
    Actress Shriya is playing as a princess in Sri Ramanujar life story.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X