கல்யாணமாகி அதுக்குள்ள 2 வருஷம் ஆகிருச்சா? ஸ்ரேயா ஆச்சரியம்

By

சென்னை: கல்யாணமாகி அதற்குள் இரண்டு வருடங்கள் ஆகிவிட்டதா என்று ஆச்சரியம் பொங்க கேட்கிறார் நடிகை ஸ்ரேயா.

தமிழில், மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விக்ரமின் கந்தசாமி, ஜீவாவின் ரெளத்ரம் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரேயா. இந்தி, தெலுங்கு, மலையள படங்களிலும் நடித்துவருகிறார்.

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

நம்ப முடியலை

நம்ப முடியலை

இந்நிலையில் இந்தி படம் ஒன்றில் நடிக்க, ரஷ்யாவில் இருந்து மும்பை வந்துள்ள ஸ்ரேயா, 'எனக்கு திருமணமாகி, அதற்குள் கிட்டத்திட்ட 2 வருடங்கள் ஆகிவிட்டது என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்றார்.

கணவர் வீட்டில்

கணவர் வீட்டில்

அவர் மேலும் கூறும்போது, 'எனது கணவர் வீட்டில் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். நடிப்பு எனக்கு முக்கியம். இன்னும் அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்று என் கணவர் விரும்புகிறார்.

மும்பைக்கு

மும்பைக்கு

என் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் சிம்பிளானது. அதை மறைக்கத் தேவையில்லை. பல்வேறு நாடுகளுக்கு பறந்துகொண்டிருந்தாலும் மும்பைக்கு வந்துவிடுகிறேன். இங்குதான் என் குடும்பம் இருக்கிறது. இந்தியாவை விட்டு விட எனக்கு விருப்பமில்லை.

நயா நயா லவ்

நயா நயா லவ்

இப்போது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் சில படங்களில் நடித்துவருகிறேன். இந்தியில், நயா நயா லவ் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறேன். இதில் அக்‌ஷய் கண்ணா, பிரியங்கா சர்மா நடிக்கின்றனர். நடனம் எனக்குப் பிடிக்கும். அதனால் ஒரு பாடலுக்கு ஆடுவதை அதிகம் விரும்புகிறேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X