பர்பெக்ட் கிஸ்ஸாம்ல..! லாக்டவுன்ல லிப்லாக்கா..? ரொமான்டிக் மூடில் பிரபல ஹீரோயின் வெளியிட்ட வீடியோ!

By

சென்னை: பிரபல ஹீரோயின் ரொமான்டிக் மூடில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

ரொமான்டிக் மூடில் ஹீரோயின் வெளியிட்ட வீடியோ!

பிரபல நடிகை ஸ்ரேயா, ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து கடந்த சில வருடங்களுக்கு முன், திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார் ஸ்ரேயா. இந்த கொரோனா காலகட்டத்தில் கணவருடன் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் வசித்து வருகிறார்.

கொரோனா

கொரோனா

உலகம் முழுவதும் பரவிய கொரொனாவால், அதிகம் பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்று ஸ்பெயின். அமெரிக்கா, இத்தாலியை அடுத்து அங்கும் ஏராளமானவர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் அங்கும் ஊரடங்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28 லட்சத்தை தாண்டியுள்ளது. இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2 லட்சத்தை நெருங்கியுள்ளது.

இந்தியாவிலும்

இந்தியாவிலும்

இந்தியாவிலும் இந்த வைரஸ், கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊரடங்கு பிறப்பித்திருந்தாலும் நாளுக்கு நாள் இந்த வைரஸின் தீவிரம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 775 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

சமையல் வீடியோ

சமையல் வீடியோ

இதற்கிடையே பார்சிலோனாவில் இருந்து தனது கணவருடன் டான்ஸ் மற்றும் சமையல் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் அடிக்கடி பதிவிட்டு வருகிறார் ஸ்ரேயா. கொரோனாவால் அவரும் அவர் கணவரும் எப்படி பாதிக்கப்பட்டார்கள் என்பதை கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் வீட்டில் கேக் தயாரித்துள்ள ஸ்ரேயா, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

லிப்லாக் முத்தம்

லிப்லாக் முத்தம்

அந்த வீடியோவில் அவர் தனது கணவருக்கு கொடுத்துள்ள லிப் லாக் முத்தத்துக்கு ஏராளமான லைக்ஸ். அதில், இதுதான் நான் தயாரித்த முழுமையான முதல் கேக். கேக் ரகசியத்தை என்னுடன் பகிர்ந்துகொண்ட திவ்யா ராவுக்கு நன்றி. சில வருடங்களுக்கு முன், பெங்களூரில் எனக்காக இந்த கேக்கை செய்தீர்கள். அது என் வாயில் உருகுவதை எப்போதும் நினைப்பேன்' என்று தெரிவித்துள்ளார்.

பண்ண முடியுமா?

பண்ண முடியுமா?

இதற்கு ரசிகர்கள் சரமாரியான கமென்ட்களை பதிவு செய்துள்ளனர். அதில் ஒருவர், 'அந்த கேக்கை அப்படியே ஸ்விக்கில டெலிவர் பண்ண முடியுமா? என்று கேட்டுள்ளார். 'அந்த ரெசிபியை அனுப்பினா, எங்களுக்கு யூஸ்புல்லா இருக்கும் என்று சிலர் கேட்டுள்ளனர். நீங்க கொடுத்த லிப்லாக்.. வாவ் பெர்பக்ட் கிஸ் என்று ஒரு ரசிகர் தெவித்துள்ளார்.

ஏன் லிப்லாக்?

ஏன் லிப்லாக்?

இன்னொருவர், 'ஹஸ்பன்ட் சும்மா இருந்தாலும் ஸ்ரேயா சும்மா இருக்க மாட்டேங்கிறாங்களே?' என்றும் 'நாங்க பேச்சிலர்ஸ் நொந்து போய் இருக்கோம். இப்படி கிஸ் கொடுத்து அதை வீடியோவா போடணுமா? லாக்டவுன்ல ஏன் லிப்லாக்? என்று சிலரும் கேட்டுள்ளனர். நீங்க மட்டும் எப்பவும் ரொமான்டிக் மூட்ல இருக்கீங்களே எப்படி? என்று சிலரும் கேட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X