மீண்டும் டைவிங் கனவு.. கடலுக்கு அடியில் நீந்தியபடி பிரபல ஹீரோயின்.. வசமாகப் புகழும் ரசிகர்கள்!
சென்னை: கடலுக்கடியில் நீந்தியபடி பிரபல நடிகை வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
பிரபல நடிகை ஸ்ரேயா, ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து கடந்த சில வருடங்களுக்கு முன், திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த கொரோனா காலகட்டத்தில் கணவருடன் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் வசித்து வருகிறார்.

கொரோனா பாதிப்பு
உலகம் முழுவதும் பரவிய கொரொனாவால், அதிகம் பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்று ஸ்பெயின். அங்கும் ஏராளமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இந்தத் தொற்று வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் கொரோனா அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாவது இடத்துக்கு வந்திருக்கிறது இந்தியா. இதைக் கட்டுப்படுத்த உலகநாடுகள் தீவிரமாக போராடி வருகின்றன.

புதிய தொற்று நோய்
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.75 லட்சத்தை தாண்டி இருக்கிறது. இந்நிலையில் கொரோனா உருவான சீனாவில் நேற்று 127 புதிய கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளன. சீனா தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக 100 க்கும் மேற்பட்ட புதிய தொற்று நோய்களைப் பதிவு செய்துள்ளது. இது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை ஸ்ரேயா சரண்
இதற்கிடையே கொரோனா காலத்தில் பார்சிலோனாவில் இருக்கும் நடிகை ஸ்ரேயா அங்கிருந்தபடி கணவருடன் டான்ஸ், சமையல் மற்றும் ஜாலி கேலி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன் கொரோனாவால் அவரும் அவர் கணவரும் எப்படி பாதிக்கப்பட்டார்கள் என்பதையும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் இப்போது புதிய புகைப்படங்களை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கடலுக்கு அடியில்
ஒரு போட்டோவில், கடலுக்கடியில் அவர் நீந்தும் போட்டோவை அவர் பதிவிட்டுள்ளார். அது த்ரோப்பேக் போட்டோவாக இருக்கலாம் என்று தெரிகிறது. கிளாமராக இருக்கும் அந்த போட்டோவுக்கு கேப்ஷனாக, மீண்டும் டைவிங் கனவில் இருக்கிறேன். அதற்கான சாத்தியத்திற்குக் காத்திருப்போம். வரும் நாட்கள் சிறப்பாக அமைய நம்பிக்கையுடன் வேண்டிக் கொள்வோம் என்று கூறியுள்ளார்.

சிறப்பான போட்டோ
இந்தப் போட்டோவுக்கு நடிகைகள் மேக்னா நாயுடு, ஷர்மிளா மந்த்ரே ஆகியோர் கமென்ட் போட்டுள்ளனர். இது சிறப்பான போட்டோ என்று கூறியுள்ளனர். ஒருவர், முதல் பிளைட் விட்டதும் நேரா இந்தியா வந்திருங்க? டைவிங் பண்ணலாம் என்று கூறியுள்ளார். கடலுக்கடியில் நீங்கள் இருக்கும் மேலும் பல போட்டோக்களை பார்க்க ஆசையுடன் இருக்கிறேன் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

கந்தசாமியை மறக்கல
'உங்களுக்கு 50 வயசு ஆனாலும் நீங்கதான் ஹாட் கேர்ள். எக்ஸ்கியூஸ் மீ மிஸ்டர் கந்தசாமியை மறக்கல' என்று சிலரும் மீண்டும் தமிழ் சினிமாவுல பார்க்க ஆசைப்படறோம், எப்ப வருவீங்க? என்று சிலரும் பிகினி உங்களுக்கு சூப்பரா இருக்கும் அந்த போட்டோக்களை பதிவு பண்ணுங்க என்று சில ஜொல் ரசிகர்களும் கூறியுள்ளனர். நடிகை ஸ்ரேயாவின் இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

கருப்பு வெள்ளை
இதையடுத்து உலகம் முழுவதும் பெண்களுக்கு ஆதரவாகப் பரவி வரும் #Challenge accepted - சவாலுக்காக, கருப்பு வெள்ளை போட்டோவையும் பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவும் மிரட்டலாக இருக்கிறது. இதற்கும் ரசிகர்கள் தங்கள் லைக்ஸ்களை அள்ளித் தெளித்துள்ளனர். மானே, தேனே, ஹாட், செம, ஸ்டன்னிங் என்றும் அவரை வர்ணித்து பலர் கமென்ட் போட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











