என்னது தலைமுடி நரைச்சிடுச்சா? நம்ப முடியலையே? ஸ்ரேயாவுக்கு கணவர் முத்தம்.. ரசிகர்கள் அப்படி கேள்வி

By

சென்னை: நடிகை ஸ்ரேயா, தனது காதல் கணவருடன் வெளியிட்டுள்ள நெருக்கமான போட்டோஸ் வைரலாகி வருகிறது.

ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் நடிக்க இருக்கிறார், நடிகை ஸ்ரேயா. இதன் ஷூட்டிங்கில் அவர் எப்போது பங்கேற்கிறார் என்பது தெரியவில்லை.

இதில் ஏற்கனவே பெரும் நட்சத்திர பட்டாளம் இருக்க, ஸ்ரேயா கேரக்டர் எப்படி இருக்கும் என்பது பற்றியும் அவர் தெரிவிக்கவில்லை.

இன்னும் காதல்

இன்னும் காதல்

இருந்தாலும் இன்னும் தனது காதல் கணவருடன் பார்சிலோனாவிலேயே அவர் ஜாலியாக இருப்பதாகச் சொல்கிறார்கள். நடிகை ஸ்ரேயா, தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

ஸ்ரேயா தோற்றம்

ஸ்ரேயா தோற்றம்

ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து வந்த ஸ்ரேயா, 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். இப்போது கமனம் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் ஸ்ரேயாவின் தோற்றம் அவர் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.

லிப் லாக் முத்தம்

லிப் லாக் முத்தம்

இந்த கொரோனா காலகட்டத்தில் இருந்து தனது கணவருடன் வசிக்கும் ஸ்ரேயா, பார்சிலோனாவில் இருந்தபடி அடிக்கடி தனது போட்டோ மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் தனது கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

ஜில் ஸ்ரேயா

ஜில் ஸ்ரேயா

இப்போதும் தனது கணவருடன் ஜில்லாக இருக்கும் ஸ்ரேயா, அந்தப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இருவரும் நெருக்கமாக இருந்தபடி கன்னத்தில் முத்தம் கொடுக்கும் ஸ்டில்களை பதிவு செய்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

பார்க்க முடியலை

பார்க்க முடியலை

ஒருவர், தமிழ்ப் படங்கள்ல உங்களை பார்க்க முடியலையே என்று வருத்தப்பட்டிருக்கிறார். இன்னொருவர், ஒரு புகைப்படத்தில் அவர் ஹேர்ஸ்டைல் வெள்ளையாக தெரிய, என்னது தலைமுடி நரைச்சுப் போச்சா? நம்பவே முடியலையே? எனக் கவலையாக கேட்டிருக்கிறார். சில நெட்டிசன்ஸ், செம ரொமான்டிக் ஜோடி என்று ஏக்கமாக கூறியுள்ளனர்.

பொறாமையா இருக்கு

பொறாமையா இருக்கு

இன்னும் சிலர், உங்களை பார்த்தா பொறாமையா இருக்கு, ஆண்ட்ரி உங்களுக்கு கணவரா கிடைச்சதுக்கு நீங்க கொடுத்து வச்சிருக்கணும் என்று கூறியுள்ளனர். சிலர், உங்கள் சிரிப்பு மாதிரி வேற யாருக்குமே இல்லை, நீங்க வேற லெவல் ஸ்ரேயா என புகழ்ந்துள்ளனர். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X