'போதும், முடியல.. இத்தோட நிறுத்திடணும்..' வைரலாகும் நடிகை ஸ்ரேயாவின் லிப் லாக் போட்டோஸ்!
சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள லிப் லாக் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பிரபல நடிகை ஸ்ரேயா, தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருகிறார்.
தமிழில் ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

திருமணம்
ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து வந்த ஸ்ரேயா, 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார் ஸ்ரேயா. அடுத்து, எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் நடிக்க இருக்கிறார்.

பார்சிலோனா
இதில் அவர் அஜய்தேவ்கன் ஜோடியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. சின்ன கேரக்டர் என்றும் அவர் நடிக்கும் காட்சிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. கொரோனா காலகட்டத்தில் தனது கணவருடன் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் இருந்தார், ஸ்ரேயா.

போட்டோ வீடியோ
உலகம் முழுவதும் பரவிய கொரோனாவால், அதிகம் பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஸ்பெயினும் ஒன்று. அங்கிருந்தபடி அடிக்கடி தனது போட்டோ மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். கணவருடன் ஜாலி கேலியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக செய்து வருகிறார்.

லிப் லாக் முத்தம்
இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில், தனது கணவருக்கு அவர் லிப் லாக் முத்தம் கொடுக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். அதற்கு கேப்ஷனாக, முத்தங்களையும் அணைப்பையும் அனுப்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இத்தோட நிறுத்திடணும்
இதையடுத்து நெட்டிசன்ஸ், கிண்டலாக கமென்ட்களை பதிவு செய்துள்ளனர். 'போதும் முடியலை.. இதை இத்தோட நிறுத்திடணும்' என்று சிலர் கூறியுள்ளனர். சிலர், ஏன் இப்படி? சோசியல் டிஸ்டன்ஸ் கடைபிடிக்கறதில்லையா? கொரோனா இன்னும் போகலையே? என்று கேட்டுள்ளனர்.

பேச்சிலர்ஸ் பாவம்
இன்னும் சில கலாய் ரசிகர்கள், பேச்சிலர் பசங்க பாவம் என்று சோகமாகத் தெரிவித்துள்ளனர். ஒரு சில நெட்டிசன்ஸ், உங்க பர்சனல் விஷயத்தை எல்லாமா போஸ்ட் பண்ணுவீங்க. கொடுமையா இருக்கு? என்றும் சிலர் அடுத்து என்ன தமிழ்ப் படத்துல நடிக்கிறீங்க? என்றும் கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











