சந்திரா, பவித்ரா... ஸ்ரேயாவின் புதிய அவதாரங்கள்.....!
நடிகை ஸ்ரேயா இப்போது சந்திரா, பவித்ரா என கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். சந்திரா படத்தில் இளவரசியாக அசத்தினாலும் பவித்ரா படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கிறாராம்.
அழகாக இருந்தாலும் சில படங்கள் மட்டுமே ஹிட் ஆகி தமிழில் சரியான வாய்ப்புகள் இன்றி இருக்கிறார் ஸ்ரேயா. தெலுங்கில் இஷ்டம், தமிழில் உனக்கு 20 எனக்கு 18 படத்தில் அறிமுகமான ஸ்ரேயா, சிவாஜி படத்தில் ரஜினியுடன் ஜோடி என்ற அளவிற்கு உயர்ந்தார். அடுத்தடுத்த படங்கள் ஹிட் ஆகாமல் ஏமாற்றவே சரியான வாய்ப்புகள் இல்லை.
ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம், விஷால், என பல முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தாலும் சந்திரா, பவித்ரா படங்கள் தனக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார் ஸ்ரோயா.

தீபா மேத்தா படத்தில்....
தீபா மேத்தாவின் இயக்கத்தில் மிட்நைட்ஸ் சில்ரன் படத்தில் நடித்த ஸ்ரேயா இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு படங்களில் நடிக்கிறார்.

தமிழ் கன்னடத்தில் சந்திரா
தமிழ், கன்னடத்தில் சந்திரா படத்தில் இளவரசி வேடத்தில் நடிக்கும் ஸ்ரேயா, களறி, கத்திச் சண்டை முறையாக கற்றுக் கொண்டாராம். காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக, சாகர் ஆசான் என்பவர் இரண்டு மாதம் பயிற்சி கொடுத்துள்ளார்.

கவர்ச்சியான உடைகள் உண்டு
என்னதான் இளவரசி என்றாலும் அந்த கால உடைகள், நகைகள் அணிந்து கவர்ச்சியோடு நடித்திருக்கிறாராம். எத்தனையோ கதாநாயகிகளை தேடி அலைந்து கடைசியில் ஸ்ரோயாவை புக் செய்தார் இயக்குநர் ரூபா ஐயர்.

பாலியல் தொழிலாளியாக....
தெலுங்கில் உருவாகும் படம் பவித்ரா படத்தில் முதல் முறையாக பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார் ஸ்ரேயா. ஜனார்த்தன் மஹார்ஷி இயக்குகிறார்.

5 நகரங்களில் பாடல் வெளியீடு
பவித்ரா பாடல் வெளியீட்டு விழாவை விஜயவாடா, திருப்பதி, விசாகப்பட்டினம், ராஜமுந்திரி உள்பட 5 இடங்களில் நடக்கிறது. ஏப்ரல் 6 மற்றும் 7ம் தேதிகளில் இந்த விழா நடைபெறுகிறது. விமானம் மூலம் 5 ஊர்களுக்கும் செல்லும் ஸ்ரேயா, அங்கு நடக்கும் விழாவில் படக்குழுவுடன் பங்கேற்கிறார்.

விருது கிடைக்க வாய்ப்பு
பவித்ரா படத்தில் பாலியல் தொழிலாளி வேடம், மிகவும் சவாலாக அமைந்தது என்று கூறும் இப்படத்துக்காக விருது கிடைக்கும் என்று பலரும் கூறுவதால் இப்போதே பூரிப்பில் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











