Shriya Saran: இந்த வயதிலும் தாராள கவர்ச்சி.. ஸ்ரேயா சரணின் கிளாமர் லுக்!

சென்னை: இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஸ்ரேயா சரண், தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

கோலிவுட் திரையுலகில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். 'இஷ்டம்' என்ற தெலுங்கு படம் மூலம் திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்தார். அதன் பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த தெலுங்கு படமான, சந்தோஷம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை அள்ளியது.

Shriya Saran Sets the Internet Ablaze Stunning Beachside Clicks in Swimwear

அதன் பின் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வந்த இவர், மழை திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மழை படத்தில் வெற்றியைத் தொடர்ந்து, ரஜினிக்கு ஜோடியாக சிவாஜி படத்திலும், திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ்மகன், குட்டி, கந்தசாமி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்.

நடிகை ஸ்ரேயா சரண்: இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலனான ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை, திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு பெண் குழந்தை உள்ள நிலையில் தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு தகுந்த போல ரோலில் நடித்து வருகிறார். அண்மையில் ஸ்ரேயா கேமியோ ரோலில் மிராய் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது கன்னட திரையுலகிலும் கலக்கி வருகிறார்.

Shriya Saran Sets the Internet Ablaze Stunning Beachside Clicks in Swimwear

நீச்சல் உடையில்: ஸ்ரேயாவுக்கு தற்போது 41 வயதாகிறது. ஆனாலும், இந்த வயதிலும் தனது வசீகரமான அழகால் ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியில் வைத்து இருக்கிறார். ஸ்ரேயா தனது இன்ஸ்டாகிராமில் நீச்சல் உடையில் கடற்கரையில் அதீத கவர்ச்சியில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் உச்சி கொட்டி அவரின் அழகை வர்ணித்து கவிதை பாடி வருகின்றனர். இணையத்தில் இந்த போட்டோ டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X