தமிழில் மஞ்சுவாரியர்.. அசுரன் தெலுங்கு ரீமேக்கில் யார் தெரியுமா?
Recommended Video
ஐதராபாத்: அசுரன் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடிகை ஸ்ரேயா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர், பசுபதி, பிரகாஷ்ராஜ், டீஜே, கென் கருணாஸ், அம்மு அபிராமி, நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

வெங்கடேஷ் நடிப்பில் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ள அசுரன் படத்தில் மஞ்சுவாரியர் தமிழில் நடித்த ரோலில் ஸ்ரேயா நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாள லேடி சூப்பர்ஸ்டார் மஞ்சுவாரியர் அசுரன் படத்தில் வயதுக்கு வந்த இரண்டு மகன்களுக்கு அம்மாவாக நடித்திருப்பார்.
இப்படியொரு வயதான கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கில் முன்னணி நடிகைகள் யார் செட் ஆவார்கள் என்று பட்டியலிடப்பட்டது.
இறுதியாக நடிகை ஸ்ரேயா அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபகாலமாக ஸ்ரேயா நடிப்பில் பெரிய படங்கள் வராத நிலையில், அசுரன் தெலுங்கு ரீமேக், ஸ்ரேயாவுக்கு நல்லதொரு கம்பேக்காக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழில், மஞ்சுவாரியர் மிரட்டிய அளவுக்கு தெலுங்கில் பவர்ஃபுல்லாக ஸ்ரேயா மிரட்டுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











