தமிழ், தெலுங்கில் மார்க்கெட் டல்... கன்னடத்துக்குப் போன ஸ்ரேயா!
பொதுவாக தமிழ் அல்லது தெலுங்கு நடிகைகள் இந்த இரு மொழிகளிலும் நடித்துக் கொண்டிருக்கும்போதே, இந்திக்கு முயற்சி பண்ணுவார்கள்.

இந்தி மோகம்...
இந்தியில் ஓரிரு படங்களும் கிடைக்கும். முன்பெல்லாம் கோவிந்தா, மிதுன் சக்ரவர்த்தி போன்றோர் தென்னக நடிகைகளின் கார்டியன்கள் ரேஞ்சுக்கு இருந்தார்கள்.
எந்த தமிழ் நடிகையைக் கேட்டாலும் (குறிப்பாக பானுப்ரியா, குஷ்பு), நான் மிதுனுடன் நடிக்கிறேன், கோவிந்தாவுடன் ஆடுகிறேன் என்று உதார் விட்டுக் கொண்டிருப்பார்கள்.

மலையாளம்...
கட்டக் கடேசியில் இவர்கள் தஞ்சம் புகும் இடம் மலையாளம்... அங்கு செட்டிலாக முடியாவிட்டால் இருக்கவே இருக்கு கன்னடம்.

ஸ்ரேயாவின் நிலைமை...
ஸ்ரேயாவின் நிலைமையும் அதேதான். தமிழில் ஒரு ப்ளாப் நடிகையாக வாழ்க்கையை ஆரம்பித்த ஸ்ரேயா, ரஜினியுடன் சிவாஜி படம் நடித்த பிறகு உச்சத்துக்குப் போனார்.
கமல், அஜீத் தவிர அத்தனை முன்னணி நடிகர்களுடனும் ஜோடிபோட்டுவிட்டார். தமிழில் ஒரு ரவுண்ட் முடித்ததும், ஹிந்திக்குப் போனார். அங்கும் ஓரிரு படங்கள் நடித்தார். ஆனால் அவர் நேரம், ஆங்கிலப் படங்களில் வாய்ப்பு வந்தது. மீரா நாயரின் இரு படங்களில் அடுத்தடுத்து நடித்தார் ஸ்ரேயா.

வேட்டு வைத்த ஆங்கிலம்...
ஆங்கிலப் படங்களில் நடித்ததால், ஹாலிவுட்டுக்குப் போய்விட்டோம் என்று நினைத்துக்கொண்டிருந்த ஸ்ரேயாவுக்கு, அந்த வாய்ப்புதான் ஆபத்தாக அமைந்தது. அவரை தமிழ் - தெலுங்கிலும் கண்டுகொள்ளவில்லை... இந்தியிலும் யாரும் கூப்பிடவில்லை.

வாய்ப்பு மறுத்த தனுஷ்
இந்த நிலையில், மீண்டும் தமிழில் நடிக்க பிரம்மப் பிரயத்தனம் செய்து பார்த்தார். தனது நெருங்கிய சினேகிதர் தனுஷிடமும் வாய் விட்டே வாய்ப்பு கேட்டுவிட்டார். ஆனால் ஏற்கெனவே குட்டியில் தனுஷுக்கு அக்கா மாதிரி தெரிகிறார் என ஸ்ரேயா பற்றி கமெண்ட் எழுந்ததை மனதில் வைத்து, அவர் எந்த வாய்ப்பையும் தரவில்லையாம்.

புதிய நடிகைகள் வரவு
அதற்குள், காஜல் அகர்வால், அனுஷ்கா, அமலா பால், ஹன்ஸிகா, இனியா, கார்த்திகா என ஒரு பட்டாளமே தமிழ் சினிமாவை ஆக்கிரமித்துவிட, ஸ்ரேவுக்கு தமிழில் நோ வேகன்ஸி!
கடந்த ஆண்டு, ஸ்ரேயா ஒரு மலையாளப் படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் எடுபடவில்லை. இப்போது கடைசி புகலிடமாக கன்னடத்துக்கு வந்துள்ளார் ஸ்ரேயா.

சந்திரா
கன்னடத்தில் தயாராகி, தமிழ், தெலுங்கில் டப்பாகவிருக்கும் சந்திரா படத்தில் அவர்தான் கதாநாயகி. சரித்திரப் படம்தான் என்றாலும், திகட்டத் திகட்ட கவர்ச்சி காட்டியிருக்கிறாராம் ஸ்ரேயா. இந்த அஸ்திரம் மீண்டும் தனக்கு தமிழில் வாய்ப்பு தரும் இல்லாவிட்டால் கன்னடத்திலாவது ஒரு இடத்தைப் பிடித்துத் தரும் என்ற நம்பிக்கை ஸ்ரேயாவுக்கு!


Click it and Unblock the Notifications











