அஜீத்துடன் நடிக்க ஸ்ரேயா ஆசை!

சிக்கு புக்கு படத்தில் நடித்து வரும் ஸ்ரேயாவுக்கு, வேறு தமிழ்ப் படங்கள் எதுவும் கைவசம் இல்லை. ஜக்குபாய் படமாவது கைக்கொடுக்கும் என நம்பியவருக்கு பெரும் ஏமாற்றம்.
தெலுங்கு, இந்தியிலும் கூட சொல்லிக் கொள்ளும்படி படங்கள் இல்லாததால், புதிய வாய்ப்புகள் தேடுவதில் மும்முரம் காட்டி வருகிறார்.
இதுகுறித்து ஸ்ரேயா கூறுகையில், "தமிழ் சினிமா முழுக்க முழுக்க ஹீரோக்கள் மயமாகிவிட்டது. இந்த நிலை மாற வேண்டும். அப்போதுதான் எங்களைப் போன்ற ஹீரோயின்களுக்கு சரியான கதைகள் அமையும்.
நிறைய பெண்கள் இப்போது நடிக்க விருப்பம் தெரிவிக்கிறார்கள். சிலர் நடிப்பை கேரியராகவே பார்க்கிறார்கள். இது மிகவும் சந்தோஷம் உள்ளது. ஆனாலம் இந்த நோக்கம் நிறைவேற அவர்கள் நிறைய உழைத்தாக வேண்டும்.
தமிழில் நான் எப்போதுமே ரஜினி ரசிகைதான். ஆனால் ஷாரூக் கானையும் பிடிக்கும். விஜய்யையும் பிடிக்கும். மீண்டும் அவருடன் ஒரு படம் நடிக்கும் வாய்ப்பும் உள்ளது.
எனக்கு நிறைவேறாத ஆசை ஒன்றுண்டு. அது அஜீத்துடன் நடிப்பதுதான். முன்பு எதிர்பாராத விதமாக அவருடன் நடிப்பது நிறைவேறாமல் போய்விட்டது. வரும் நாட்களில் நடக்கும் என நம்புகிறேன்" என்றார்.
வடிவேலுவுடன் ஒற்றைப் பாட்டுக்கு ஆடப் போய், அஜீத் பட வாய்ப்பை இழந்தவர் ஸ்ரேயா என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











