»   »  ரஜினிக்கு ஜோடியானார் ஸ்ரேயா ஏவி.எம். தயாரிப்பில், உருவாகும் ரஜினிகாந்த்தின் சிவாஜி படத்தில் அவருக்கு ஜோடியாக மழை பட நாயகி ஸ்ரேயாநடிக்கலாம் என்று தெரிகிறது என்று நாம் நேற்று சொன்னோம். இன்று அது உறுதியாகிவிட்டது.நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏவி.எம். தயாரி ஷங்கர் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி. இதில் யாரை ஹீரோயினாகப் போடுவதுஎன்பதில் குழப்பம் நிலவி வந்தது.முதலில் ஐஸ்வர்யா ராயை ரஜினி-இயக்குனர் ஷங்கர் தரப்பு அனுகியது. இதை சந்திரமுகி வெற்றி விழாவின்போது ரஜினியேவெளிப்படையாக தெரிவித்தார். ஐஸ்வர்யாவின் கால்ஷீட் கிடைத்தால் அவரே ஜோடி என்றார். ஆனால், ஐஸ்வர்யா ராயின் கால்ஷீட் கிடைப்பதில் தாமதம் நிலவுவதாக கூறப்படுகிறது. இதனால் சூட்டிங் தொடங்குவதும்தாமதமாகி வருகிறு. இதையடுத்து த்ரிஷா, நயன்தாரா, தெலுங்கில் கவர்ச்சியில் களியாட்டம் போட்டு வரும் நடிகை ஆயிஷாதாக்கியா என பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.திரிஷாவோ ஒரு படி மேலே போய் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஆசை என்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.நயனதாராவோ நேரடியாகவே ரஜினியை அணுகி முயன்று பார்த்தார்.இந் நிலையில் தெலுங்கில் இருந்து 20 உனக்கு 18 படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு வந்து மழை படத்தின் மூலம் தமிழில் ஒருஇடத்தைப் பிடித்துவிட்ட ஸ்ரேயாவை ரஜினிக்கு ஜோடியாக்க ஷங்கர் முடிவு செய்துவிட்டார். இத்தனைக்கும் மழை படம் சரியாகப் போகவில்லை என்பது தனிக் கதை. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனுத மகன்சரணுக்கு தயாரிப்பாளர் அந்தஸ்தை உருவாக்குவதற்காக தயாரித்த படம் தான் மழை. ஏகப்பட்ட செலவில் ரவி-ஸ்ரேயாவைவைத்து எடுக்கப்பட்ட அந்தப் படத்துக்கு ஏகத்துக்கும் விளம்பரம் செய்தும் படம் ஊத்திக் கொண்டுவிட்டது.ஆனாலும் படத்தில் கவர்ச்சியையும் நடிப்பையும் கலந்து அழகான காக்டெயில் விருந்து படைத்த ஸ்ரேயாவைத் தேடிகோடம்பாக்க தயாரிப்பு பார்ட்டிகள் வரிசை கட்ட ஆரம்பித்துவிட்டன. ஆனால், அவரோ தனது சம்பளத்தையும் ரூ. 40 லட்சமாகஉயர்த்திவிட்டாராம்.மேலும் சென்னையில் தங்க 5 நட்சத்திர ஹோட்டல் வசதி, போக வர விமான செலவு ஆகியவற்றை தயாரிப்பாளர்களே ஏற்கவேண்டும் என்று நிர்பந்திக்கிறார். இதனால் இவரது கால்ஷீட் கேட்டுச் சென்றவர்கள் பலர் திரும்பி வந்துவிட்டனர். இந் நிலையில் தான் ரஜினி படத்தில் நடிக்கஇவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.ஆனால், இதில் ஒரு இடைஞ்சல். திருவிளையாடல் என்ற படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ரேயா. இதனால்மருமகனுடன் ஜோடி போட்ட பெண்ணை எப்படி மாமனாருக்கு ஜோடியாக நடிக்க வைப்பது என்ற சிக்கல் எழுந்தது.கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ என்று குழம்பிய ஸ்ரேயா, தேவைப்பட்டால் திருவிளையாடல் படத்தில்இருந்து விலகிக் கொள்ளவும் தயாராக இருந்தார். ஆனால், அந்த குழப்பத்தையெல்லாம் ஒதுக்கி விட்டு ஸ்ரேயாவை ஹீரோயினாக்கிவிட்டார்கள் ரஜினியும் ஷங்கரும்.இது குறித்து ஸ்ரேயா கூறுகையில்,ரஜினிக்கு ஜோடியாக நடிப்பது நான் செய்த பாக்கியம். இது மிகப் பெரிய இன்ப அதிர்ச்சியாக உள்ளது. படத்தின் கதை குறித்தோஎன் கேரக்டர் குறித்தோ எனக்கு ஏதும் தெரியாது. என்ன கேரக்டராக இருந்தாலும் முழுமையாக நடித்து ரஜினி ரசிகர்கள் மனதில்இடம் பிடிப்பேன் என்றார்.ரஜினிக்கும் தனுசுக்கும் ஜோடியாக நடிப்பதன் மூலம் சமீப காலத்தில் மாமனாருக்கும் மருமகனுக்கும் ஜோடியாகும் முதல்நடிகையாகிவிட்டார் ஸ்ரேயா.

ரஜினிக்கு ஜோடியானார் ஸ்ரேயா ஏவி.எம். தயாரிப்பில், உருவாகும் ரஜினிகாந்த்தின் சிவாஜி படத்தில் அவருக்கு ஜோடியாக மழை பட நாயகி ஸ்ரேயாநடிக்கலாம் என்று தெரிகிறது என்று நாம் நேற்று சொன்னோம். இன்று அது உறுதியாகிவிட்டது.நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏவி.எம். தயாரி ஷங்கர் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி. இதில் யாரை ஹீரோயினாகப் போடுவதுஎன்பதில் குழப்பம் நிலவி வந்தது.முதலில் ஐஸ்வர்யா ராயை ரஜினி-இயக்குனர் ஷங்கர் தரப்பு அனுகியது. இதை சந்திரமுகி வெற்றி விழாவின்போது ரஜினியேவெளிப்படையாக தெரிவித்தார். ஐஸ்வர்யாவின் கால்ஷீட் கிடைத்தால் அவரே ஜோடி என்றார். ஆனால், ஐஸ்வர்யா ராயின் கால்ஷீட் கிடைப்பதில் தாமதம் நிலவுவதாக கூறப்படுகிறது. இதனால் சூட்டிங் தொடங்குவதும்தாமதமாகி வருகிறு. இதையடுத்து த்ரிஷா, நயன்தாரா, தெலுங்கில் கவர்ச்சியில் களியாட்டம் போட்டு வரும் நடிகை ஆயிஷாதாக்கியா என பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.திரிஷாவோ ஒரு படி மேலே போய் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஆசை என்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.நயனதாராவோ நேரடியாகவே ரஜினியை அணுகி முயன்று பார்த்தார்.இந் நிலையில் தெலுங்கில் இருந்து 20 உனக்கு 18 படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு வந்து மழை படத்தின் மூலம் தமிழில் ஒருஇடத்தைப் பிடித்துவிட்ட ஸ்ரேயாவை ரஜினிக்கு ஜோடியாக்க ஷங்கர் முடிவு செய்துவிட்டார். இத்தனைக்கும் மழை படம் சரியாகப் போகவில்லை என்பது தனிக் கதை. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனுத மகன்சரணுக்கு தயாரிப்பாளர் அந்தஸ்தை உருவாக்குவதற்காக தயாரித்த படம் தான் மழை. ஏகப்பட்ட செலவில் ரவி-ஸ்ரேயாவைவைத்து எடுக்கப்பட்ட அந்தப் படத்துக்கு ஏகத்துக்கும் விளம்பரம் செய்தும் படம் ஊத்திக் கொண்டுவிட்டது.ஆனாலும் படத்தில் கவர்ச்சியையும் நடிப்பையும் கலந்து அழகான காக்டெயில் விருந்து படைத்த ஸ்ரேயாவைத் தேடிகோடம்பாக்க தயாரிப்பு பார்ட்டிகள் வரிசை கட்ட ஆரம்பித்துவிட்டன. ஆனால், அவரோ தனது சம்பளத்தையும் ரூ. 40 லட்சமாகஉயர்த்திவிட்டாராம்.மேலும் சென்னையில் தங்க 5 நட்சத்திர ஹோட்டல் வசதி, போக வர விமான செலவு ஆகியவற்றை தயாரிப்பாளர்களே ஏற்கவேண்டும் என்று நிர்பந்திக்கிறார். இதனால் இவரது கால்ஷீட் கேட்டுச் சென்றவர்கள் பலர் திரும்பி வந்துவிட்டனர். இந் நிலையில் தான் ரஜினி படத்தில் நடிக்கஇவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.ஆனால், இதில் ஒரு இடைஞ்சல். திருவிளையாடல் என்ற படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ரேயா. இதனால்மருமகனுடன் ஜோடி போட்ட பெண்ணை எப்படி மாமனாருக்கு ஜோடியாக நடிக்க வைப்பது என்ற சிக்கல் எழுந்தது.கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ என்று குழம்பிய ஸ்ரேயா, தேவைப்பட்டால் திருவிளையாடல் படத்தில்இருந்து விலகிக் கொள்ளவும் தயாராக இருந்தார். ஆனால், அந்த குழப்பத்தையெல்லாம் ஒதுக்கி விட்டு ஸ்ரேயாவை ஹீரோயினாக்கிவிட்டார்கள் ரஜினியும் ஷங்கரும்.இது குறித்து ஸ்ரேயா கூறுகையில்,ரஜினிக்கு ஜோடியாக நடிப்பது நான் செய்த பாக்கியம். இது மிகப் பெரிய இன்ப அதிர்ச்சியாக உள்ளது. படத்தின் கதை குறித்தோஎன் கேரக்டர் குறித்தோ எனக்கு ஏதும் தெரியாது. என்ன கேரக்டராக இருந்தாலும் முழுமையாக நடித்து ரஜினி ரசிகர்கள் மனதில்இடம் பிடிப்பேன் என்றார்.ரஜினிக்கும் தனுசுக்கும் ஜோடியாக நடிப்பதன் மூலம் சமீப காலத்தில் மாமனாருக்கும் மருமகனுக்கும் ஜோடியாகும் முதல்நடிகையாகிவிட்டார் ஸ்ரேயா.

Subscribe to Oneindia Tamil

ஏவி.எம். தயாரிப்பில், உருவாகும் ரஜினிகாந்த்தின் சிவாஜி படத்தில் அவருக்கு ஜோடியாக மழை பட நாயகி ஸ்ரேயாநடிக்கலாம் என்று தெரிகிறது என்று நாம் நேற்று சொன்னோம். இன்று அது உறுதியாகிவிட்டது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏவி.எம். தயாரி ஷங்கர் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி. இதில் யாரை ஹீரோயினாகப் போடுவதுஎன்பதில் குழப்பம் நிலவி வந்தது.

முதலில் ஐஸ்வர்யா ராயை ரஜினி-இயக்குனர் ஷங்கர் தரப்பு அனுகியது. இதை சந்திரமுகி வெற்றி விழாவின்போது ரஜினியேவெளிப்படையாக தெரிவித்தார். ஐஸ்வர்யாவின் கால்ஷீட் கிடைத்தால் அவரே ஜோடி என்றார்.


ஆனால், ஐஸ்வர்யா ராயின் கால்ஷீட் கிடைப்பதில் தாமதம் நிலவுவதாக கூறப்படுகிறது. இதனால் சூட்டிங் தொடங்குவதும்தாமதமாகி வருகிறு. இதையடுத்து த்ரிஷா, நயன்தாரா, தெலுங்கில் கவர்ச்சியில் களியாட்டம் போட்டு வரும் நடிகை ஆயிஷாதாக்கியா என பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.

திரிஷாவோ ஒரு படி மேலே போய் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஆசை என்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.நயனதாராவோ நேரடியாகவே ரஜினியை அணுகி முயன்று பார்த்தார்.

இந் நிலையில் தெலுங்கில் இருந்து 20 உனக்கு 18 படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு வந்து மழை படத்தின் மூலம் தமிழில் ஒருஇடத்தைப் பிடித்துவிட்ட ஸ்ரேயாவை ரஜினிக்கு ஜோடியாக்க ஷங்கர் முடிவு செய்துவிட்டார்.


இத்தனைக்கும் மழை படம் சரியாகப் போகவில்லை என்பது தனிக் கதை. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனுத மகன்சரணுக்கு தயாரிப்பாளர் அந்தஸ்தை உருவாக்குவதற்காக தயாரித்த படம் தான் மழை. ஏகப்பட்ட செலவில் ரவி-ஸ்ரேயாவைவைத்து எடுக்கப்பட்ட அந்தப் படத்துக்கு ஏகத்துக்கும் விளம்பரம் செய்தும் படம் ஊத்திக் கொண்டுவிட்டது.

ஆனாலும் படத்தில் கவர்ச்சியையும் நடிப்பையும் கலந்து அழகான காக்டெயில் விருந்து படைத்த ஸ்ரேயாவைத் தேடிகோடம்பாக்க தயாரிப்பு பார்ட்டிகள் வரிசை கட்ட ஆரம்பித்துவிட்டன. ஆனால், அவரோ தனது சம்பளத்தையும் ரூ. 40 லட்சமாகஉயர்த்திவிட்டாராம்.

மேலும் சென்னையில் தங்க 5 நட்சத்திர ஹோட்டல் வசதி, போக வர விமான செலவு ஆகியவற்றை தயாரிப்பாளர்களே ஏற்கவேண்டும் என்று நிர்பந்திக்கிறார்.


இதனால் இவரது கால்ஷீட் கேட்டுச் சென்றவர்கள் பலர் திரும்பி வந்துவிட்டனர். இந் நிலையில் தான் ரஜினி படத்தில் நடிக்கஇவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆனால், இதில் ஒரு இடைஞ்சல். திருவிளையாடல் என்ற படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ரேயா. இதனால்மருமகனுடன் ஜோடி போட்ட பெண்ணை எப்படி மாமனாருக்கு ஜோடியாக நடிக்க வைப்பது என்ற சிக்கல் எழுந்தது.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ என்று குழம்பிய ஸ்ரேயா, தேவைப்பட்டால் திருவிளையாடல் படத்தில்இருந்து விலகிக் கொள்ளவும் தயாராக இருந்தார்.


ஆனால், அந்த குழப்பத்தையெல்லாம் ஒதுக்கி விட்டு ஸ்ரேயாவை ஹீரோயினாக்கிவிட்டார்கள் ரஜினியும் ஷங்கரும்.

இது குறித்து ஸ்ரேயா கூறுகையில்,

ரஜினிக்கு ஜோடியாக நடிப்பது நான் செய்த பாக்கியம். இது மிகப் பெரிய இன்ப அதிர்ச்சியாக உள்ளது. படத்தின் கதை குறித்தோஎன் கேரக்டர் குறித்தோ எனக்கு ஏதும் தெரியாது. என்ன கேரக்டராக இருந்தாலும் முழுமையாக நடித்து ரஜினி ரசிகர்கள் மனதில்இடம் பிடிப்பேன் என்றார்.

ரஜினிக்கும் தனுசுக்கும் ஜோடியாக நடிப்பதன் மூலம் சமீப காலத்தில் மாமனாருக்கும் மருமகனுக்கும் ஜோடியாகும் முதல்நடிகையாகிவிட்டார் ஸ்ரேயா.

Read more about: shriya to pair with rajini

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil